Most Stoppage Train In India: நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் ரயில்களை இயக்கி வருகிறது நமது இந்தியன் ரயில்வே துறை. மலைகள் முதல் பாலைவனம் வரை, கன்னியாகுமாரி கடல் கரையிலிருந்து ஜம்மு காஷ்மீர் வரை என மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். குறுகிய தூரம் பயணிக்கும் ரயில், நீண்ட தூரம் பயணிக்கும் ரயில், நிற்காமல் இயங்கும் ரயில், ஒவ்வொரு நிலையத்திலும் நின்று செல்லும் ரயில் என இந்தியன் ரயில்வே பல விதமான ரயில்களை இயக்கி வருகிறது.
Indian Railway Most Stoppage Train: இன்று நாம் தெரிந்துக்கொள்ள இருப்பது, நாட்டிலேயே அதிக நிறுத்தங்களைக் கொண்ட ரயில் குறித்து தான். இந்த ரயில் 37 மணி நேரம் பயணித்து 111 நிலையங்களை கடந்து செல்லும் ஹவுரா-அமிர்தசரஸ் மெயில் பற்றி அறிவோம்.
நாட்டில் அதிக ரயில் நிலையங்களில் நின்று ரயில் ஒன்றும் உள்ளது. அது மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மற்றும் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் இடையே பயணிக்கும் ஹவுரா-அமிர்தசரஸ் மெயில் ரயில்வே ஆகும். ஹவுரா-அமிர்தசரஸ் மெயில் நீங்கள் நினைப்பது போல 10, 20 அல்லது 30 நிலையங்களில் நின்று செல்லாமல், மொத்தம் 111 நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டும், இறக்கிவிட்டும் தனது பயணத்தை நிறைவு செய்கிறது.
ஹவுரா-அமிர்தசரஸ் மெயில் என்பது ஹவுரா மற்றும் அமிர்தசரஸ் இடையே 1910 கிலோமீட்டர் தூரத்தை 37 மணி நேரத்தில் கடக்கிறது. பயணத்தின் போது, இந்த ரயில் பாதையில் 111 நிலையங்களை கடந்து செல்கிறது.
ஹவுரா-அமிர்தசரஸ் மெயில், நாட்டிலேயே அதிக நிறுத்தங்களைக் கொண்ட ரயில், ஐந்து மாநிலங்கள் வழியாக செல்கிறது. மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உள்ள பெரிய நகரங்கள் வழியாக செல்லும் ரயில் 111 ரயில் நிலையங்களை கடந்து செல்கிறது
ஹவுரா-அமிர்தசரஸ் மெயில் பயணிக்கும் 111 ரயில் நிலையங்களில், சிறிய ரயில் நிலையங்கள் முதல் புகழ்பெற்ற பெரிய ரயில் நிலையங்களும் அடங்கும். சிறிய ரயில் நிலையங்களில் 1 முதல் 2 நிமிடங்கள் மட்டுமே ரயில் நிறுத்தப்படும். பெரிய ரயில் நிலையங்களில் 5 நிமிடம் முதல் 10 நிம் இடம் வரையிம் ரயில் நிறுத்தப்படுகிறது.
ஹவுரா-அமிர்தசரஸ் மெயில் ரயிலின் நேர அட்டவணை அதிகபட்சமாக மக்கள் பயணிக்கும் வகையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் ஹவுரா ஸ்டேஷனில் இருந்து இரவு 7:15 மணிக்கு புறப்பட்டு மூன்றாம் நாள் காலை 8:40 மணிக்கு அமிர்தசரஸ் சென்றடைகிறது. இதேபோல், இந்த ரயில் அமிர்தசரஸில் இருந்து மாலை 6.25 மணிக்குப் புறப்பட்டு மூன்றாம் நாள் காலை 7.30 மணிக்கு ஹவுரா நிலையத்தை வந்தடைகிறது.
இந்த ரயிலின் கட்டணமும் சாதாரணமானது. ஹவுரா-அமிர்தசரஸ் மெயிலின் ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட் கட்டணம் ரூ.695, மூன்றாம் ஏசி கட்டணம் ரூ.1870, இரண்டாம் வகுப்பு ஏசி கட்டணம் ரூ.2755 மற்றும் முதல் வகுப்பு ஏசி கட்டணம் ரூ.4835.
இந்தியாவில் அதிக நிறுத்தங்களைக் கொண்ட ரயில் மற்றும் அதிவேக ரயிலில் இதுவும் ஒன்று. இதன் இடைவெளி மிகவும் நீண்டதாக இருக்கும் அதாவது நிறுத்தங்கள் அதிகம் இருக்கும்.