நயன்தாரா (Nayanthara) எனும் டயானா மரியா குரியன் லேடி சூப்பர் ஸ்டார். 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படத்தில் கால் வைத்து திரையுலகில் அறிமுகமாகி இன்றுரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் காதல் இளவரசி டயானா. இங்கிலாந்து இளவரசி டயானாவுக்கு கொஞ்சமும் குறைந்தவரல்ல நம்ம லேடி சூப்பர் ஸ்டார்..
2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழில் கால் பதித்த நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்துவிட்டார். பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நயன்தாராவின் மவுசு இன்னும் குறையவில்லை. இன்று போல் என்றும் வாழ்க என்று இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்களுக்கு நயனின் அயனான புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
யாரடி நீ மோகினி என்று கேட்டால் பில்லாவாக சொல்லி அடிக்கும் பாஸ் என்கிற பாஸ்கரனுடன் ஏகனாய் சத்யமாய் குசேலனாய் கோவாவில் ஆரம்பம் செய்து எதிர்நீச்சல் போடும் ராஜாராணி நயன்தாரா. ஆதவன், ஏகன் என்றால் இது நம்ம ஆளு மாசு என்கிர மாசிலாமணியாக இருந்தாலும் தனி ஒருவன் என்று சொல்லும் நயன்தாரா.
நயன்தாரா என்றால் கண்களில் இருந்து வரும் தாரை என்றும் சொல்லலாம். இது ரசிகர்களின் கண்களின் இருந்து கண்ணீர் வழிந்தாலும் அதிலும் நயன்தாராவின் தாக்கம் இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்கிறதோ?
இது கதிர்வேலன் காதல் என்று சொன்னால் நானும் ரெளடி தான் என காதம்பரியாய் கர்ஜித்தால், நண்பேண்டா என்று அனைவரும் நயந்து குழைந்து போகச் செய்யும் நயன்தாரா...
காஷ்மோரா திரைப்படத்தை நைட் ஷோ பார்க்கச் சென்றால் மாயா என்று கொலையுதிர் காலமாய் டோராவாய் இருமுகன் காட்டும் நயன்....
காத்துவாக்குல ரெண்டு காதல் என்றால் இமைக்கா நொடிகளாய் இருக்கும் கோலமாவு கோகிலா நயன்தாரா....
வேலைக்காரன், வாசுகி என்றால் திருநாளில் அறம் வளர்த்த மூக்குத்தி அம்மன் நயன்தாரா பாடி கார்ட் தேவைப்படாத லஷ்மி பாஸ்
மிஸ்டர் லோக்கலும் லேடி சூப்பர் ஸ்டாருக்கு விசுவாசமாய் இருப்பார்கள் நிரஞ்சனா....
துபாய் சீனு என்றால் துளசி 20/20 என்னும் லேடி சூப்பர் ஸ்டார் நெற்றிக் கண்ணை திறந்தால் சர்வம் சக்திமயம்