Lucky Color Of Zodiacs: ராசிக்கு ஏற்ப அதிர்ஷ்ட நிறத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் நன்மை பயக்கும். நவகிரகங்களின் எந்த ராசியை சேர்ந்தவர் எந்த நிறத்தை பயன்படுத்தினால், மகிழ்ச்சியுடன் வாழலாம்? தெரிந்து கொள்வோம்...
வண்ணங்கள் நமக்கு அழகு சேர்ப்பது மட்டுமல்ல, நம் வாழ்வின் திசையையும் தீர்மானிக்கும் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் நம்பிக்கை. ஒவ்வொரு கிரகத்தின் ஆதிக்கத்தில் இருப்பவர்களும் வெவ்வேறு நிறத்தை பயன்படுத்துவது நல்லது.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொடுக்கும். மேஷ ராசியினருக்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும் சிவப்பு நிறம், உங்கள் சோர்வைப் போக்கும். அதேபோல, நீங்கள் கருப்பு நிறத்தையும் தேர்வு செய்யலாம்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் சிவப்பு, மஞ்சள், பிரவுன் ஆகிய நிறங்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த நிறங்களின் ஆடைகளை நீங்கள் அணியலாம், உங்கள் வீட்டின் அலங்காரத்தில் இந்த வண்ணங்களைப் பயன்படுத்தலாம். இது தவிர, மஞ்சள் நிறமும் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும்.
கடக ராசி: சந்திரனின் ஆற்றல் கொண்ட கடக ராசிக்காரர்கள் இயல்பிலேயே உணர்திறன் உடையவர்கள். மக்களின் மனதை வெல்லும் திறன் அவர்களுக்கு உண்டு. கடக ராசிக்காரர்களுக்கு சாம்பல், வெள்ளி, நீலம் நிறங்கள் மிகவும் ஏற்றவை
மகரம்: சாம்பல், கருப்பு மற்றும் நீல நிறங்கள் மகர ராசிக்காரர்களுக்கு நல்லதாக கருதப்படுகிறது. அன்றாட வாழ்க்கையில் இந்த வண்ணங்களைப் பயன்படுத்தினால், நிதி விவகாரங்கள் சாதகமாக இருக்கும்
வண்ணங்கள் வாழ்வில் வளம் சேர்ப்பவை. எந்த ராசிக்காரருக்கு எந்த வண்ணம் உகந்தது என்பதை கிரக நிலை தீர்மானிக்கும் என்றாலும், பொதுவாக வெண்ணிற ஆடை அனைவருக்கும் ஏற்றது