மாமன்னன் படம் வெளியானதை அடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் துருவ் படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளதாக தலவல் வெளியகியுள்ளது.
துருவ் விக்ரம் தனது அடுத்த படத்தில் இயக்குனர் மாரி செல்வராஜுடன் இணையவுள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இப்படம் விளையாட்டு வாழ்க்கை வரலாறு என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாரி, இந்த படம் மானாதி கணேசன் என்ற கபடி வீரரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அவர் அர்ஜுனா விருது பெற்றவர் மற்றும் மிக நெருங்கிய உறவினர் என கூறினார்.
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் மூலம் இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், துருவ் கடைசியாக விக்ரமுடன் மகான் படத்தில் நடித்தார் .
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மாமன்னன் படம் வெளியான நிலையில் மாரி செல்வராஜ் இந்த படத்தின் வேலைகளை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
துருவ் நடிக்கும் இந்த படத்தின் வேலைகள் முடித்த பிறகு தனுஷ் படத்தின் வேலைகளைத் தொடங்குவேன் என்றும் மாரி செல்வராஜ் தெரிவித்தார்.