தீபாவளி ராசிபலன்: இந்த ராசிகளுக்கு அற்புதமான ராஜயோகம்... சனி அருளால் வெற்றிகள் குவியும்

Sani Peyarchi Palangal: தீபாவளிக்கு பிறகு சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால், அதிகப்படியான லாபம் அடையவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Sani Vakra Nivarthi Palangal: ஜோதிட கணக்கீடுகளின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரகப் பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. ராசிகள் தவிர நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என கிரகங்களில் பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றன.  சனி பலவான் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்ககளை அளிப்பதால் அவர் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனி பகவான் ஜூன் 30, 2024 அன்று வக்ர பெயர்ச்சி அடைந்தார். நவம்பர் 15 ஆம் தேதி தீபாவளிக்கு பின்னர் சனிபகவான் வக்ர நிவர்த்தி அடையுள்ளார். தீபாவளிக்கு பின் நடக்கும் சனி வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகமான நற்பலன்கள் இருக்கும். இவர்கள் வாழ்வில் ஆக்கபூர்வமான திருப்பங்கள் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.  

1 /10

அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். தற்போது அவர் வக்ர நிலையில் உள்ளார். தீபாவளிக்கு பின், அதாவது நவம்பர் 15 ஆம் தேதி அவர் வக்ர நிவர்த்தி அடைகிறார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. 

2 /10

தீபாவளிக்கு பின் நடக்கும் சனி வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகமான நற்பலன்கள் இருக்கும். இவர்கள் வாழ்வில் ஆக்கபூர்வமான திருப்பங்கள் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.  

3 /10

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு தீபாவளிக்குப் பிந்தைய காலம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. சனி வக்ர நிவர்த்தி வியாபாரத்தில் அபரிமிதமான லாபத்தை அள்ளிக்கொடுக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத பலன்களைக் காண்பீர்கள். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

4 /10

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு, சனி பெயர்ச்சி மங்களகரமானதாகவும், நன்மைகளை அளிக்கக்கூடியதாகவும் கருதப்படுகிறது. வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். வியாபாரம் வேகமாக முன்னேறும். வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

5 /10

கன்னி: தீபாவளிக்குப் பிறகு, சனி வக்ர நிவர்த்தி கன்னி ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும். தீபாவளிக்குப் பின் வரும் காலம் நிதி ரீதியாக லாபகரமானதாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

6 /10

மகரம்: சனி வக்ர நிவர்த்தி மகர ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். தீபாவளிக்கு பிறகு சனியின் வக்ர நிவர்த்தியால் வாழ்க்கையில் சிறப்பான மாற்றம் ஏற்படும். பொருளாதார நிலை மேம்படும். நிதி நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். முதலீடு மற்றும் நிதி விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். 

7 /10

கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் சனியின் வக்ர நிவர்த்தியால் அதிக பலன் அடைவார்கள். சனி வக்ர நிவர்த்தியால் இந்த ராசியில் ஷஷ ராஜயோகம் உருவாகும். இந்த ராஜயோகத்தின் பல சுப பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையின் பல அம்சங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். நம்பிக்கை அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் அபரிமிதமான நிதிப் பலன்கள் உண்டாகும்.

8 /10

மீனம்: மீன ராசிக்காரர்கள் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வார்கள். கடினமாக உழைத்து இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவார்கள். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வுடன் இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் விரிவடைந்து லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.  

9 /10

சனி பகவானின் அருள் பெற சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளாறு பதிகம் ஆகியவற்றை பாராயணம் செய்யலாம். சனிக்கிழமைகளில் பிள்ளையார், முருகர், சிவன், துர்கை, சனீஸ்வரர் ஆகிய கோயில்களுக்கு சென்று வழிபடுவது நல்லது. ஏழைகளுக்கு உணவளிப்பது சனிபகவானை மகிழ்விக்கும்.  

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.