நோய்களை விரட்டி அடிக்கும் ஆற்றல் கொண்ட சில செடிகள்... கட்டாயம் வீட்டில் இருக்கட்டும்

நோய்நொடி இல்லாத வாழ்க்கை வேண்டும் என்று நினைக்காதவர் இருக்க முடியுமா என்ன? இந்நிலையில், நோய்களை விரட்டியடிக்கும் ஆற்றல் கொண்ட சில செடிகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

சில செடிகள் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இவை பல உடல் நல பிரச்சனைகளை தீர்க்கும் ஆற்றல் கொண்டவை. இந்தச் செடிகளை வீட்டில் வைப்பதால், பலவித நோய்களுக்கு வீட்டு வைத்திய மூலம் தீர்வை பெறலாம்.

 

1 /8

மருத்துவ குணம் நிறைந்த செடிகள்: நமது முன்னோர்கள், பலவிதமான நோய்களை தீர்ப்பதற்கு மீது சிகிச்சையை பயன்படுத்தி வந்தனர். சில எளிமையான செடிகள், வீட்டில் வைத்திருந்தால், எல்லாவித பிரச்சனைக்கும் மருந்துகளை சாப்பிடாமல், வீட்டு வைத்தியம் மூலம் எளிதாக தீர்வை பெறலாம்.  

2 /8

துளசி: மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி, ஒரு வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு செடி. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் வளர்ச்சி எதிர்ப்பு பண்புகள், சாதாரண சளி இருமல் முதல், பல நோய்களுக்கு மருந்தாகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. உடலை டீடாக்ஸ் செய்வது முதல், கொலஸ்ட்ராலை எரிப்பது வரை பலவகையில் பலன் கொடுக்கும்.  

3 /8

கறிவேப்பிலை: உணவிற்கு மனத்தையும் சுவையையும் கொடுக்கும் கறிவேப்பிலையில் எண்ணற்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் , வைட்டமின்கள் கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. உடல் பருமன் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது முதல், நீரழிவு நோயை கட்டுக்குள் வைப்பது வரை பல நோய்களுக்கு அரு மருந்தாகிறது.

4 /8

புதினா: எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளும் நிறைந்த புதினா,, செரிமானத்தை மேம்படுத்தி, அஜீரணம் வாயு, அசிடிட்டி நெஞ்செரிச்சல் போன்ற அஜீரண பிரச்சனைகள் அனைத்திற்கும் மருந்தாக அமைகிறது. அதோடு சர்மா ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி இளமையைக் காக்கிறது.

5 /8

கற்றாழை: மருத்துவ குணங்கள் நிறைந்த கற்றாழை என்னும் ஆலிவேரா செடி வீட்டில் இருந்தால், சுற்றுச்சூழல் சுத்தமாக இருப்பதுடன், நீரழிவு உடல் பருமன் போன்றவற்றை குறைக்க உதவுகிறது. சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.  

6 /8

கொத்துமல்லி: உடலை டீடாக்ஸ் செய்வது முதல், கொலஸ்ட்ராலை குறைப்பது வரை, எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ளது. அதோடு உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கிறது. இதனை வீட்டில் வளர்க்க உரிய சிறிய தொட்டி ஒன்றே போதும்.  

7 /8

நித்திய கல்யாணி: இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் ஆற்றல் நித்திய கல்யாணிக்கு உண்டு. இதன் பூக்கள் இலைகள் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது கட்டாயம் வீட்டில் இருக்க வேண்டும்.  

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.