Side Effects of Beetroot: பீட்ரூட் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட அற்புதமான காய்கறி என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், பீட்ரூட் எல்லோருக்கும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை.
பீட்ரூட்டை உண்பதால், இதய ஆரோக்கியம் முதல் உடல் பருமன் குறைவது வரை எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அடையலாம். எனினும் குறிப்பிட்ட சில உடல்நல பிரச்சனைகள் இருந்தால், பீட்ரூட் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது
பீட்ரூட்: ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக விளங்கும் பீட்ரூட்டில், இரும்பு சத்து, கால்சியம் மல்டிவிட்டமின்கள் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளன. எனினும், அனைவருக்கும் இது நன்மை பயக்கும் என்று கூற இயலாது. குறிப்பிட்ட சில உடல்நல பிரச்சனை அல்லது நோய் இருந்தால், பீட்ரூட் சாப்பிடுவது பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது பிரச்சனையை அதிகரிக்கும்.
நீரிழிவு நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகள், பீட்ரூட்டை அளவோடு சாப்பிடுவது நல்லது. ஏனெனில், பீட்ரூட்டில் கிளைசிமிக் இன்டெக்ஸ் மிக அதிக அளவில் உள்ளதால், இதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது, சுகர் லெவலை எகிற வைக்கும்.
சிறுநீரக கல் நோயாளிகள்: சிறுநீரகக் கல் பிரச்சனை இருந்தால், பீட்ரூட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் அல்லது அளவோடு உட்கொள்ள வேண்டும். பீட்ரூட்டில் உள்ள ஆக்சலேட், சிறுநீரகக் கல் பிரச்சினையை அதிகரிக்கும் என்பதால், நம்பிக்கையுடன் இருப்பது நல்லது.
கல்லீரல் பிரச்சனை: கல்லீரல் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் கல்லீரல் பாதிப்பு அல்லது நோய் தொடர்பான மருந்துகளை உட்கொள்பவர்கள், பீட்ரூட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
குறைந்த ரத்த அழுத்தம்: லோ பிபி பிரச்சனை இருந்தால், பீட்ரூட் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. பீட்ரூட்டில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது. எனவே அளவிற்கு அதிகமாகும் போது, இரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்து ஆபத்தை ஏற்படுத்தலாம்.
ஒவ்வாமை: பீட்ரூட் சாப்பிடுவதால் சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்படலாம். எனவே அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் பீட்ரூட்டை அளவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பீட்ரூட் பக்க விளைவுகள்: பொதுவாகவே, அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள். அந்த வகையில், ஆரோக்கியமான உணவு என்றாலும், அளவிற்கு மிஞ்சினால், பாதிப்பையே ஏற்படுத்தும். இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டால், ஆரோக்கியமாக இருக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.