குளிர்காலத்தில் பேய் கனவுகள் அதிகம் வருவது ஏன் தெரியுமா? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்

Dreams | குளிர்காலத்தில் வரும் விசித்திரமான மற்றும் பேய் கனவுகளுக்கு காரணம் என்ன என்பது குறித்து சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

Dreams in Winter | இரவு நேரத்தில் ஆழ்ந்து தூங்கும்போது பயமுறுத்தும் அல்லது அழ வைக்கும் கனவுகள் ஏன் வருகிறது என்பதற்கான பின்னணி காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். 

 

1 /8

குளிர்காலம் வந்தாலே தூக்கமும் சிறப்பாக இருக்கும். ஆழ்ந்த தூக்கத்தில் கனவுகள் அடிக்கடி வரும். அந்த கனவுகள் எல்லாம் பயமுறுத்துபவையாக, தூக்கத்தை கெடுப்பவையாக, சில நேரங்களில் அழகூட வைப்பவையாக இருக்கும். 

2 /8

குளிர்காலத்தில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்ற கேள்விக்கு சமீபத்தில் ஃபிரான்டியர்ஸ் இன் நியூரோ சயின்ஸ் இதழில் முக்கியமான ஆய்வு ஒன்று வெளியிடப்பட்டது. அந்த ஆய்வு இந்தக் கேள்விக்கு பதிலளித்துள்ளது.

3 /8

இந்த ஆய்வின்படி, குளிர்காலத்தில் தூக்க முறை மாறுகிறது. குறிப்பாக, கோடை காலத்துடன் ஒப்பிடும்போது கண் அசைவுகள் அதிகரிக்கும். இதனால், தூக்க நேரம் சராசரியாக 30 நிமிடங்கள் அதிகரிக்கிறது. உங்கள் கண்கள் மூடியிருந்தாலும் சுய நினைவுடன் மற்ற நாட்களிலும் இருக்கும் நேரத்தை ஒப்பிடும்போது குளிர்காலத்தில் அதிகமாக ஆழ்ந்து தூங்குவீர்கள்.

4 /8

இரவு நேரத்தில் மூளை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அதனால்தான் கனவுகள் மிகவும் சிக்கலானதாகவும், பயமுறுத்தும் மற்றும் விசித்திரமானதாகவும் தோன்றுகிறது என அந்த ஆய்வு கூறுகிறது. ஜேர்மன் மெத்தை தயாரிப்பு நிறுவனம் நடத்திய இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளர் மார்ட்டின் சீல் கூறுகையில், குளிர்காலத்தில் சூரிய அஸ்தமனம் மற்றும் குறுகிய பகல் பொழுது இருக்கும்.   

5 /8

இதனால், உடலில் மெலடோனின் அளவு அதிகரிக்கிறது. மெலடோனின் என்பது தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன். அதன் அதிகரித்த அளவுகள் ஆழ்ந்த தூக்கம் மற்றும் அதிக கனவுகளுக்கு வழிவகுக்கும் என விளக்கமளித்துள்ளார். 

6 /8

இந்த ஆய்வின் போது, குளிர்காலத்தில் வரும் கனவுகளின் அர்த்தத்தை அறிய கூகுளில் அதிகம் தேடுவதும் கண்டறியப்பட்டது. குளிர்கால மாதங்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான கனவுகள் தொடர்பான கூகுள் தேடல்களை ஆய்வு பகுப்பாய்வு செய்தது. அதில் குளிர்காலத்தில் பயங்கரமான கனவுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

7 /8

குளிர்ந்த இரவுகளில் இந்த விசித்திரமான மற்றும் பயங்கரமான கனவுகளால் நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், பின்வரும் தீர்வுகள் உங்களுக்கு உதவக்கூடும்: லேசான உணவை உண்ணுங்கள். தூங்கும் முன் செரிமானத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் உணவுகள் மற்றும் காரமான உணவுகளை உண்ணாதீர்கள்.

8 /8

மதுவைத் தவிர்க்கவும். மது அருந்துவது தூக்கத்தின் தரத்தைக் கெடுக்கும். தூங்குவதற்கு முன் 10 நிமிடம் தியானம் செய்வது மனதை அமைதிப்படுத்தும். சரியான நேரத்தில் தூங்குங்கள். வழக்கமான நேரத்திற்கு தூங்கி எழுந்திருப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். கனவுகள் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்தால், அவற்றை எழுதி உளவியல் நிபுணரை அணுகவும்.