Mercury Transit to LEO: சிம்மத்தில் புதன்: பணத்தை வாரி வழங்கும் புத பகவான்

Mercury Transit to LEO: ஆகஸ்ட் 21 வரை புதன் இந்த ஐந்து ராசிகளுக்கும் பணத்தை வாரி வழங்கப்போகிறார். புத்திக்கு அதிபதியான புதன் இந்த மாத இறுதியில் அதாவது ஜூலை 31 ஆம் தேதி சிம்ம ராசியில் நுழைகிறார். ஐந்து ராசிக்காரர்களுக்கு மிகவும் அருமையான காலகட்டமாக இது இருக்கும்.

புதன் பார்ப்பதால் பண பலன் பெறப் போகும் ராசிகள்: புத்திசாலித்தனம், வார்த்தை விளையாட்டு, பணம், வியாபாரம் ஆகியவற்றில் பெரும் செல்வாக்கு செலுத்தும் கிரகங்களின் அதிபதியான புதன் இந்த மாத இறுதியில் அதாவது ஜூலை 31 ஆம் தேதி சிம்ம ராசியில் நுழைகிறார். 5 ராசிக்காரர்களுக்கு சிம்ம ராசியில் புதன் நுழைவது மிகவும் சாதகமான பலன்களைக் கொடுக்கும். ஆகஸ்ட் 21ம் தேதி வரை புதன் சிம்மத்தில் இருக்கும் வரை இவர்களுக்கு அதிக பணம் கிடைக்கும்...

(பொறுப்புத் துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை)

1 /6

ஜூலை 31ம் தேதி சிம்மத்திற்கு செல்லும் புதனால் பலனடையப்போகும் ராசிகள் 5. எஞ்சிய 7 ராசிகளுக்கு வேறு பலன்கள் கிடைத்தாலும் பண பலன்கள் அவ்வளவாக இருக்காது.

2 /6

ஆகஸ்ட் மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மாதம் என்று சொல்லலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சமய நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. உங்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.

3 /6

சிம்ம ராசியில் புதன் சஞ்சாரம் மேஷ ராசியினரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கும். வேலையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். பணியில் புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி நிலையும் நன்றாக இருக்கும்.

4 /6

சிம்ம ராசியினருக்கு புதன் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். புதிய திட்டங்களில் வேலை செய்ய இது நல்ல நேரம். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

5 /6

புதனின் ராசி மாற்றம் கன்னி ராசியினருக்கு பெரிதும் நன்மை பயக்கும். பணச் சிக்கல்கள் பறந்து போகும். நல்ல லாபம் ஈட்ட வாய்ப்புகள் உள்ளன. புதிய வேலை தேடுபவர்களுக்கு உங்களுக்கு பிடித்த வேலை கிடைக்கும்.

6 /6

கும்ப ராசிக்காரர்களுக்கு வேலைத் துறையில் புதன் சஞ்சாரம் நன்மை தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியாளர்களுக்கு பதவி உயர்வு யோகம் உண்டு. திருமணமாகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். நிதி ரீதியாக நேரம் நன்றாக உள்ளது.