சனியின் பெயர்ச்சி, இந்த ராசிக்காரர்களுக்கு சகலமும் கிடைக்கும்

வேத ஜோதிட சாஸ்திரப்படி மெதுவாக நகரும் சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளில் தனது ராசியை மாற்றிவிடுகிறது. ஆனால் பிப்ரவரி 18, 2022 அன்று, சனி கிரகம் தனது நட்சத்திர மண்டலத்தை மாற்றி அவிட்டம் நட்சத்திரத்தில் பிரவேசித்தது. அதன்படி சனி அடுத்த 13 மாதங்களுக்கு மகரம், கும்பம் ராசியில் இருப்பார், இது அனைத்து ராசிக்காரர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுப பலனை தரும்.

1 /5

மேஷம்: மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முழுமை பெற ஆரம்பிக்கும். தொழிலுக்கு நேரம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு, வருமானம் அதிகரிக்கும். நீண்ட பயணம் இருக்கலாம். சொத்து வாங்கும் திட்டங்கள் நிறைவேறும்.

2 /5

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு ஏற்ற காலம். வேலையில் பெரிய முன்னேற்றம் அடையலாம். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். வருமானம் அதிகரிக்கும். எங்கிருந்தோ திடீர் பண ஆதாயம் உண்டாகும். பயணங்கள் இருக்கும்.

3 /5

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு பணவரவுகள் உண்டாகும். தொழிலுக்கு நல்ல காலம் அமையும். லாபகரமான மாற்றங்கள் ஏற்படலாம். உங்கள் உடல்நலம் மற்றும் உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

4 /5

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு திருமணம் கை கூடி வரும். உங்கள் மனைவியுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கலாம்.

5 /5

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைத் தரும். பணம் சம்பாதிப்பதற்கான முயற்சிகள் விரைவில் பலனளிக்கும். நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)