குழந்தைகளுக்கு வீட்டில் நாம் சொல்லிக்கொடுக்கும் சில சின்ன சின்ன அடிப்படையான விஷயங்கள், அவர்கள் வாழ்கைக்கு மிக சிறந்த பலனை தரும்.
ஐந்து முதல் எட்டு வயதுக்குள் நீச்சல் சொல்லிக் கொடுங்கள். ஆபத்தில் தன்னை காத்துக் கொண்டு, பிறரையும் காப்பாற்ற முடியும்.
பத்து வயதில், சாதம் வைக்கவும், காய்கறி நறுக்கவும் பழக்குங்கள். சமையல் ஒரு மனிதனின் அடிப்படை தேவையும், பழக்கமும்.
தான் சாப்பிட்ட தட்டை தானே சுத்தம் செய்ய வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்துங்கள். நாம் யாரையும் சார்ந்து இருக்ககூடாது என்ற எண்ணத்தை உருவாக்கும்.
வாசித்தல் என்ற போதை பழக்கத்தை ஏற்படுத்துங்கள். முடிந்தால் வீட்டில் ஒரு நூலகம் அமைக்க உதவுங்கள்.
பணம் எளிதில் கிடைக்காது என்பதை தெரியப்படுத்துங்கள். 15 வயதில் அவர் தனியாக சேமிக்க வழி செய்யுங்கள்.
ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் தொந்தரவுகள் ஏற்படும் என்று அறிவுறுத்துங்கள்.
நீ ஒரு ஆண், பெண் உன்னை விட தாழ்ந்தவள் என்பதை உணர்த்தும் வகையில் எந்த செயலையும் செய்யாதீர்கள்.
அதிகாலை எழுந்து இரவில் சீக்கிரம் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
முடியாது, நடக்காது, கிடைக்காது, இதுதான், இவ்வளவுதான், இப்படித்தான் என்ற வார்த்தைகளை குழந்தைகளிடம் அதிகம் பயன்படுத்துங்கள்.
செல்ஃபோன்களை குழந்தைகள் கைகளில் கொடுக்கும்போது நேரத்தை நிர்ணயம் செய்து கொடுங்கள்.