IPL 2025 Mega Auction: ஐபிஎல் மெகா ஏலத்தில் RTM கார்டு பயன்படுத்தியாவது, மும்பை இந்தியன்ஸ் அணி இந்த 3 வீரர்களை தக்கவைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்த RTM கார்டு முறை திரும்பக் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது. கடந்த மெகா ஏலத்தில் இந்த முறை இல்லை. இந்த RTM கார்டு என்பது வீரர்களுக்கு பின்னடைவு என அஸ்வின் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 முறை கோப்பையை வென்றுள்ளது.
கடந்த நான்கு சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. கேப்டன்ஸி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.
5 முறை கோப்பையை வென்ற ரோஹித் தலைமையில் 2021, 2022, 2023 சீசனிலும், ஹர்திக் பாண்டியா தலைமையில் 2024ஆம் ஆண்டிலும் மும்பை இந்தியன்ஸ் அணி போராடியும் கோப்பையை நெருங்க முடியவில்லை.
எனவே, இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்ஸியில் மாற்றம் இருக்குமா, யார் யாரை தக்கவைக்க இருக்கிறார்கள் என்பது குறித்து கடும் எதிர்பார்ப்புகள் உள்ளன.
அந்த வகையில், இந்த மூன்று வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி முதற்கட்டமாக தக்கவைக்காமல் தவறவிட்டாலும் மெகா ஏலத்தில் நிச்சயமாக RTM பயன்படுத்தியாவது தக்கவைக்கும். அவர்கள் குறித்து இதில் காணலாம்.
இஷான் கிஷன்: இவரை கடந்த மெகா ஏலத்தில் பெரும் தொகைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால், இம்முறை இஷான் கிஷனை (Ishan Kishan) முதற்கட்டமாக தக்கவைக்க வாய்ப்பில்லை. எனவே, அவரை ஏலத்தில் நிச்சயம் RTM கார்டு மூலம் எடுக்கும்.
நேஹல் வதேரா: இவர் மும்பை அணிக்கு கடந்த இரண்டு சீசன்களில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர் ஆவார். நேஹல் வதேரா (Nehal Wadhera) அதிரடி பேட்டிங் மும்பை அணியின் மிடில் ஆர்டருக்கு நிசச்யம் தேவை. எனவே, இவர் ஏலத்திற்கு போனாலும் RTM மூலம் தக்கவைக்க முயற்சிக்கும்.
திலக் வர்மா: சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா என நட்சத்திர இந்திய வீரர்களை தக்கவைக்க வேண்டும் என்பதால் திலக் வர்மாவை (Tilak Varma) நிச்சயம் மும்பை அணி விடுவிக்கும். இருந்தாலும் ஏலத்தில் RTM கார்டை பயன்படுத்தி தூக்க முயற்சிக்கும்.