Must Buy Shares For Diwali 2024: தீபாவளி வரும் அக். 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பங்குச்சந்தைகளில் இந்த 6 பங்குகளை நீங்கள் இப்போதே குறிவைக்கலாம். சரியான தொகையில் கிடைக்கும்பட்சத்தில் நீங்கள் அவற்றை வாங்கினால் நல்ல லாபம் தர வாய்ப்புள்ளது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பங்குகளின் விலைகள் அனைத்தும் இன்று (அக். 21) பங்குச்சந்தைகள் நிறைவுற்றபோது இருந்த நிலவரத்தை வைத்து குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு: வாசகர்களே, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பங்குசந்தை குறித்த தகவல்கள் முதலீட்டாளர்களுக்கு தனியார் பங்குச்சந்தை சார்ந்த தரகு நிறுவனத்தின் பரிந்துரைகள் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இவை ஜீ நியூஸ் (Zee Tamil News) பரிந்துரை கிடையாது, இதற்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது. இந்த பங்குகளை வாங்கும் முன் உங்கள் நிதி சார்ந்த நிபுணரிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
தீபாவளிக்கு புத்தாடை வாங்குவது, வெடி வாங்குவதை போன்று இதுபோன்ற பங்குகளில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் நன்மைகளை விளைவிக்கும். எனவே, இந்த தீபாவளி காலகட்டத்தில் இந்த 6 பங்குகளை உற்று நோக்கி உங்களுக்கு ஏதுவானதை தேர்ந்தெடுங்கள்.
Tata Motors: தற்போது இந்த பங்கு 902 ரூபாயில் (Tata Motors Share Price) உள்ளது. இந்த பங்கு 1,162 ரூபாய் வரை போகலாம் என கூறப்படுகிறது. எனவே, இதன்மூலம் உங்களுக்கு 28% மேல் லாபம் கிடைக்கலாம்.
Neogen Chemicals: தற்போது இந்த பங்கு 1980 ரூபாயில் (Neogen Chemicals Share Price) உள்ளது. இந்த பங்கு 2871 ரூபாய் வரை செல்லும் என கூறப்படுகிறது. இதன்மூலம் உங்கலுக்கு 45 சதவீதத்திற்கும் அதிகமாக லாபம் கிடைக்கலாம்.
City Union: இந்த பங்கு தற்போது 150 ரூபாய்க்கு (City Union Share Price) விற்கப்படுகிறது. இது 200 ரூபாய் வரை செல்லும் என கணிக்கப்படுகிறது. எனவே இப்போது இதை நீங்கள் வாங்கினால் 33 சதவீதத்திற்கு மேல் இலக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
Jupiter Wagons: இந்த பங்கு தற்போது 507 ரூபாய்க்கு (Jupiter Wagons Share Price) விற்கப்படுகிறது. இதற்கு 680 ரூபாய் வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போதே நீங்கள் வாங்கினால் 35 சதவீதத்திற்கும் மேல் உங்களுக்கு லாபம் கிடைக்கலாம்.
APL Apollo Tubes: இந்த பங்கு தற்போது 1540 ரூபாயில் (APL Apollo Tubes Share Price) உள்ளது. இதற்கு 1964 ரூபாய் வரை டார்கெட் வைக்கப்பட்டுள்ளது. இப்போது வாங்கினால் 27% சதவீதத்திற்கும் மேல் லாபம் கிடைக்கலாம்.
DLF: இந்த பங்கு 1075 ரூபாய் வரை செல்லும் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது இந்த பங்கு 858 ரூபாய்க்கு (DLF Share Price) விற்கப்படுகிறது. எனவே தற்போது இதை வாங்கினால் 25 சதவீதத்திற்குமே லாபம் கிடைக்கலாம்.