Foods you should not refrigerate: ஒரு காலத்தில் சமைத்த மற்றும் பச்சையான காய்கறிகளை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்ட ஃபிரிட்ஜ், இப்போது அனைத்து உணவு பொருட்களையும் வைக்க பயன்படுத்தப் படுகிறது.
இந்திய வீடுகளில், ஃபிரிட்ஜ் உணவின் பாதுகாவலராக கருதப்படுகிறது. ஃபிரிட்ஜ் உணவுப் பொருட்களை நீண்ட நேரம் பாதுகாப்பாக வைக்க அல்லது கெட்டுப் போகாமல் இருக்கப் பயன்படுகிறது. ஆனால் சில உணவுகளை நாம் ஃபிரிட்ஜில் வைப்பதை தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன பொருட்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
வெங்காயம் ஈரப்பதம் மற்றும் இயற்கை எண்ணெய்களின் சமநிலையைக் கொண்டுள்ளது, அவை அவற்றின் சுவை மற்றும் அமைப்புக்கு பங்களிக்கின்றன. ஃபிரிட்ஜில் வைத்தால் இந்த சமநிலையை சீர்குலைத்து, குளிர்ந்த, ஈரமான நிலையில் அவற்றை வெளிப்படுத்துகிறது.
வாழைப்பழத்தை ஃபிரிட்ஜில் வைத்தால் அதன் தோல் பகுதி கருமையாக்குகிறது, இயற்கையாக பழுக்காமல் அதிக குளிர் காரணமாக எளிதில் கெட்டு விடும்.
முந்திரி, திராட்சை, பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்ற உலர் பழங்களை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. உலர்ந்த பழங்கள் மற்றும் விதைகளை ஃபிரிட்ஜில் வைப்பது அவற்றை ஈரப்பதமாகிறது, இது பூஞ்சையை ஊக்குவிக்கிறது.
முழு மசாலாப் பொருட்களையும் ஃபிரிட்ஜில் வைக்க கூடாது. ஏனெனில் இந்த மசாலா பொருட்கள் ஃபிரிட்ஜில் வைப்பதால் அவற்றின் சுவை, மணம் மற்றும் குணங்கள் பாதிக்கப்படும்.
பூண்டை ஃபிரிட்ஜில் வைப்பதால் அது முளைத்து அதன் சுவை மாறுகிறது. பூண்டை உரித்து ஃபிரிட்ஜில் வைத்தால், அதன் மருத்துவ குணங்கள் மறைந்துவிடும். எனவே, பூண்டை எப்போதும் குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் சேமிக்கவும். பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக காகிதம் அல்லது துணி பைகளில் வைக்கவும்.
பெரும்பாலான இந்திய சமையலறைகளில் உருளைக்கிழங்கு எப்போதும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சிலர் இது கெட்டுப் போகாமல் இருக்க, ஃபிரிட்ஜில் வைப்பார்கள். ஆனால் அவ்வாறு செய்வது தவறு. உருளைக்கிழங்கை ஃபிரிட்ஜில் வைக்கப்படும் போது, உருளைக்கிழங்கு மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றுகிறது, இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.