நிதா அம்பானியின் பாரம்பரிய காஸ்ட்யூம்... ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் நச் போட்டோஸ்!

பாரிஸில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் நிதா அம்பானி அணிந்திருந்த காஸ்ட்யூம் தற்போது இணையவாசிகளிடம் வைரலாகி வருகிறது. 

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கி ஆக. 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய வீரர்கள் 117 பேர் பங்கேற்றுள்ளனர். 

 

 

1 /8

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (IOC) இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக நிதா அம்பானி மீண்டும் போட்டியின்றி தேர்வானார்.  

2 /8

பாரிஸில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 142ஆவது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய உறுப்பினராக ஏகோபித்த ஆதரவுடன் நிதா அம்பானி அனைத்து வாக்குகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.   

3 /8

தொடர்ந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்திற்கு சென்றிருந்த போது நிதா அம்பானி அணிந்திருந்த ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.   

4 /8

சேலை பிரியரான நிதா அம்பானி, அந்த கூட்டத்திற்கும் சேலை கட்டியே சென்றிருநதார். யானை தந்தத்தின் நிறத்தில் நிதா அம்பானி அணிந்திருந்த சேலை பார்த்தவுடன் கவரும் வகையில் இருந்தது.   

5 /8

அந்த சேலையில் பல வண்ணங்களுடன் பூ, பறவைகள் போன்ற டிசைன்களுடனான வேலைப்பாடுகள் இடம்பெற்றிருந்தன.  

6 /8

சேலை மற்றும் பிளவுஸில் கோல்டன் நிற பார்டர் வேலைப்பாடுகள் இடம்பெற்றிருந்தன. அந்த சேலையின் நிறத்திற்கும், கோல்டன் நிற பார்டருக்கும் எடுப்பாக இருந்தது.   

7 /8

அதே சேலை நிறத்தில் அரைக் கை பிளவுஸை அவர் அணிந்திருந்தார். பாரம்பரியமும், புதுமையும் கலந்து லுக்கில் நிதா அம்பானி மிரட்டினார்.   

8 /8

தற்போது பாரிஸில் நிதா அம்பானியுடன், முகேஷ் அம்பானியும் சென்றுள்ளார். இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படமும் தற்போது வெளியானது. நீல நிற கோட் சூட்டில் முகேஷ் அம்பானியும் நிதா அம்பானியுடன் போஸ் கொடுத்திருந்தார்.