செல்வமகள் லட்சுமியின் செல்லப்பிள்ளைகளாக மாற இதெல்லாம் உங்க வீட்ல இருக்கா? தேடிவந்த ஆடிவெள்ளி!

Mahalakshmi Katacham Tips : ஆடி வெள்ளிக் கிழமையான இன்று செய்யும் வழிபாடுகள் வாழ்க்கையில் வளம் சேர்க்கும். சிவனை விட சக்திக்கு அதிக சக்தியுள்ள மாதமான ஆடியில் தேடி வந்திருக்கும் வெள்ளிக்கிழமையன்று அன்னையை வழிபட்டால் வாழ்க்கையில் துன்பங்கள் தொலைந்தோடும்...  

லட்சுமி கடாட்சம் பெருக, துர்க்கை அன்னையின் வடிவங்களை வணங்கும் ஆடியில் சில முக்கியமான விஷயங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்... இவற்றை அறிந்துக் கொண்டு பின்பற்றினால் நீங்கள் செல்வமகளின் செல்லப்பிள்ளைகளாக மாறலாம்...

1 /8

சுக்கிரனுக்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமை நாளன்று அன்னை மகாலட்சுமிக்கு விசேஷமானது. செல்வத்திற்கு உறைவிடமான லட்சுமியின் அருளைப் பெறவும், என்றும் செல்வம் உங்களிடம் தங்கிவிடவும் சில விஷயங்களை செய்ய வேண்டும்

2 /8

செல்வம், ஆடம்பரம் மற்றும் மகிழ்ச்சியை தரும் சுக்கிரன் கிரகத்தை வலுப்படுத்தவும் வெள்ளிக்கிழமை சிறப்பான நாளாகும். அதிலும், ஆடிவெள்ளியில் தொட்டதெல்லாம் துலங்க அன்னை அருள் புரிவார்

3 /8

கஜம் என்றால் யானை, உறுதியான யானையைப்போல என்றென்றும் உங்களிடம் செல்வம் நிலைத்து இருக்க அன்னை கஜலட்சுமியின் அருட்கடாட்சம் அவசியம் தேவை

4 /8

குத்துவிளக்கில் லட்சுமி அன்னை வாசம் செய்கிறாள் என்று சொல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கை அலங்கரித்து அதில் நெய்விட்டு தீபம் ஏற்றினால், அங்கு லட்சுமி வாசம் புரிவார்

5 /8

வீட்டில் பணவரவை கொண்டு வரும் மணிபிளாண்ட் தாவரம் எப்போதும் வீட்டில் இருப்பது நல்லது

6 /8

வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்கள் கண்களில்படும்படி கற்பக விநாயகரின் படம் இருந்தால், கண் திருஷ்டி உள்ளிட எந்த தோஷங்களும் ஏற்படாது, வீட்டிற்குள் தீயசக்திகளும் நுழையாது

7 /8

அம்மனின் அருள் இருந்தால் வந்த பணம், வீட்டிற்குள்ளேயே தங்கிவிடும். வெள்ளிக்கிழமைகளில் தானதர்மம் செய்வதும் ஆத்தாளை அபிராமவல்லியை வழிபடுவதும் லட்சுமிகடாட்சத்தை நிலைக்க வைக்கும்

8 /8

வீட்டில் தினசரி விளகேற்றி வழிபடுவது நல்ல ஆக்கப்பூர்வமான பணவரத்தையும் செழுமையையும் கொண்டுவந்து சேர்க்கும்