Ola Electric Scooter-ன் அசத்தும் டிஜிட்டல் அம்சங்கள் ஒரு பார்வை!!

மிகுந்த எதிர்பார்ப்புக்குப் பிறகு அறிமுகம் செய்யப்பட்ட ஓலா மின்சார ஸ்கூட்டர் பல வித முன்னுதாரணங்களை படைத்துள்ளது. 

 

Ola S1 181 கிமீ வரம்பைக் கொண்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 115 கிமீ ஆகும். இதை வெறும்  40 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

1 /6

ஓலா எலக்ட்ரிக் ஆகஸ்ட் 15 அன்று தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஓலா எஸ் 1 ஐம் ரூ .99,999 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியது. ஓலா எஸ் 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு வகைகளில் வரும் எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ. இவை முறையே ரூ .99,999 மற்றும் ரூ .1,29,999 என்ற விலையில் அறிமுகம் ஆகியுள்ளன. நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஓலா எஸ் 1 ஐ செப்டம்பர் 8 முதல் கொள்முதல் செய்யத் தொடங்கி, அக்டோபரில் 1,000 நகரங்களில் விநியோகத்தைத் தொடங்கும். செப்டம்பர் 8 வரை, நிறுவனம் 499 ரூபாய்க்கு முன்பதிவுகளை ஏற்றுக்கொண்டிருக்கும். ஓலா எஸ் 1, 181 கிமீ வரம்பில் வருகிறது, ஃபாஸ்ட் சார்ஜரில் 40 நிமிடங்களுக்குள் முழுமையாக இதை சார்ஜ் செய்ய முடியும். இந்த ஸ்கூட்டர் ரிவர்ஸ் மோட், ஹில் ஹோல்ட் ஃபங்க்ஷன், டிரைவிங் மோட்ஸ் மற்றும் குரூஸ் கண்ட்ரோல் போன்ற பல்வேறு அம்சங்களுடன் வருகிறது. ஓலா எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ மின்சார ஸ்கூட்டர்களின் சிறந்த டிஜிட்டல் அம்சங்களை இங்கே பார்க்கலாம்

2 /6

உங்கள் போனுடன் இணைந்திருக்கும் ஸ்மார்ட் ஆன் போர்டு சென்சார்களின் உதவியால், நீங்கள் ஸ்கூட்டரை நெருங்கும்போதும், தூரமாக செல்லும்போதும், ஸ்கூட்டர் தானாக அன்லாக் மற்றும் லாக் ஆகிவிடும்.

3 /6

உங்கள் மனநிலை மற்றும் சூழலுக்கு ஏற்ப, S1-ன் தோற்றம் மற்றும் ஒலி அம்சங்களை நாம் மாற்றிக்கொள்ளலாம். இதன் மூலம் வாகன ஓட்டிகளின் அனுபவம் மேம்படும்.

4 /6

ஒரு மல்டி மைக்ரோஃபோன் அரே மற்றும் AI ஸ்பீச் அல்காரிதம் ஆகியவற்றால் இயக்கபப்டும் இந்த ஸ்கூட்டரில், 'ஹாய் ஓலா' என்று மட்டும் கூறி உங்கள் ஓலா ஸ்கூட்டரை இயக்கலாம்.

5 /6

உங்கள் ஓலா ஸ்கூட்டரில் தடையற்ற வழிசெலுத்தல் அம்சம் கிடைக்கும். சார்ஜ் மையங்கள் பற்றிய விவரங்களையும் பெற முடியும்.

6 /6

சவாரிக்கு முன் அல்லது இலக்கை அடைந்த பிறகு, உங்கள் ஸ்கூட்டரை உங்கள் தொலைபேசி மூலம் கட்டுப்படுத்தலாம்.