ATM-ல் பணம் எடுக்கும்போது பிரச்சனை வந்தால் உங்கள் வங்கி தீர்வளிக்கும்: Know details here

ATM-ல் ஏதாவது கோளாறு ஏற்பட்டாலோ, அல்லது பரிவர்த்தனை நடக்கவில்லை என்றாலோ, சரியான நேரத்தில் கணக்கில் மீண்டும் தொகை வரவு வைக்கப்படாவிட்டால் வங்கி உங்களுக்கு இழப்பீடு வழங்கும். ரிசர்வ் வங்கியின் ட்வீட்டின் படி, பரிவர்த்தனை தோல்வியுற்றால், வங்கி அதை வாடிக்கையாளரின் கணக்கில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திருப்பித் தர வேண்டும்.

ATM-ல் ஏதாவது கோளாறு ஏற்பட்டாலோ, அல்லது பரிவர்த்தனை நடக்கவில்லை என்றாலோ, சரியான நேரத்தில் கணக்கில் மீண்டும் தொகை வரவு வைக்கப்படாவிட்டால் வங்கி உங்களுக்கு இழப்பீடு வழங்கும். ரிசர்வ் வங்கியின் ட்வீட்டின் படி, பரிவர்த்தனை தோல்வியுற்றால், வங்கி அதை வாடிக்கையாளரின் கணக்கில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திருப்பித் தர வேண்டும்.

1 /5

ஒரு ATM பரிவர்த்தனை தோல்வியுற்று, அதன் பிறகு வங்கி, குறிப்பிட்ட நேரத்திற்குள் பணத்தை திரும்ப கணக்கில் போடவில்லை என்றால், அதற்கு வங்கி இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும். இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி தனது தளத்திலும் ATM தொடர்பான பல கேள்விகளுக்கு விடை அளித்துள்ளது.

2 /5

ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, வாடிக்கையாளர் ஒழுங்காக நடக்காத அல்லது பிரச்சனை உள்ள பரிவர்த்தனைகளைப் பற்றி விரைவாக வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். இருப்பினும், ATM பரிவர்த்தனை தோல்வியுற்றால், வங்கி 5 வேலை நாட்களில் வாடிக்கையாளரின் கணக்கில் பணத்தை மீண்டும் வரவு வைக்க வேண்டும். இதில் வங்கி தாமதித்தால், அதற்கு தினமும் ரூ .100 இழப்பீடு வழங்க வேண்டும்.

3 /5

SBI தனது வாடிக்கையாளர்களின் மேம்பாட்டிற்காக புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக ATM மோசடியில் இருந்து அவர்களைப் பாதுகாக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் மிகப்பெரிய வங்கியின் வாடிக்கையாளர்கள் ATM-ல் பரிவர்த்தனை செய்யும்போது, ​​அதே நேரத்தில் அதைப் பற்றிய தகவல்கள் அவர்களின் மொபைலில் வரும்.

4 /5

ATM-ல் இருப்பு சரிபார்ப்பு மற்றும் அறிக்கை கோரிக்கை மிகவும் பாதுகாப்பானதாகிவிட்டது. SBI வாடிக்கையாளர் ATM-ல் இருந்து கணக்கின் நிலுவைத் தொகையைச் சரிபார்த்தால், பதிவு செய்யப்பட்ட மொபைலில் எஸ்எம்எஸ் வரும். இதன் மூலம் வாடிக்கையாளருக்கு விவரங்கள் தெரியவரும். ஆனால் ஒரு வேளை அவர் இந்த பரிவர்த்தனையை செய்யவில்லை என்றால், அவருக்கான எச்சரிக்கையாகவும் அது இருக்கும்.  

5 /5

SBI-ன் ட்வீட்டின் படி, ஒரு வாடிக்கையாளர் இருப்பு விசாரணை அல்லது மினி அறிக்கைக்காக ATM-ஐ இயக்கும் போதெல்லாம், ஒரு எஸ்எம்எஸ் அவரது மொபைலுக்கு செல்லும். இதில், டெபிட் கார்டுடன் இத்தகைய பரிவர்த்தனைக்கான செயல்முறை தொடங்கியது என இது குறித்து ஒரு எச்சரிக்கை இருக்கும். வாடிக்கையாளர் அத்தகைய கோரிக்கையை கோரவில்லை என்றால், அவர் அது குறித்து புகார் செய்யலாம். இதன் மூலம் மோசடியைத் தவிர்க்கலாம். அவர் உடனடியாக தனது கார்டை பிளாக் செய்யலாம்.