மூல நோய் பாடாய் படுத்துதா? அப்ப இதுக்கெல்லாம் ‘நோ’ சொல்லிடுங்க

Piles Problem: மூல நோய் என்பது தவறான உணவுப்பழக்கம் மற்றும் சீரற்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனையாகும். இந்த நோயால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பைல்ஸ் என்பது ஆசனவாயின் உள்ளேயும் வெளியேயும் வீக்கமடையும் ஒரு நோயாகும். இந்த நோயின் காரணமாக, சில மருக்கள் போன்ற உருவாக்கம் ஆசனவாயின் உள் பகுதியில் அல்லது வெளிப்புறத்தில் தொடங்குகிறது. பல முறை மலம் கழிக்கும்போது, ​​இந்த மருக்களில் இருந்து ரத்தம் வர ஆரம்பிக்கிறது.

இந்த நோய்க்கு மிகப்பெரிய காரணம் மலச்சிக்கல் ஆகும். இது உலகில் 15 சதவீத மக்களை பாதிக்கிறது. வாயு மற்றும் செரிமான நோய்களுக்கு மலச்சிக்கல் மிகப்பெரிய காரணம். மலச்சிக்கலால் ஆசனவாய் தொடர்பான பைல்ஸ், ஃபிஷர், ஃபிஸ்துலா போன்ற நோய்கள் வளர்கின்றன. மூல நோய் வளர்ச்சிக்கு மோசமான உணவு முறையே முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.

 

1 /4

வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், காரமான உணவுகள், மதுபானம், பால் பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் அதிக உப்பு ஆகியவற்றை உணவில் உட்கொள்வது மூல்நோய்க்கு வழிவகுக்கிறது. இந்த நோயின் அறிகுறிகளை வேகமாக அதிகரிக்க சில மசாலாப் பொருட்கள் காரணமாகின்றன. பைல்ஸ் அறிகுறிகளை அதிகரிக்கும் மூன்று மசாலாப் பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.  

2 /4

மூல நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கள் உணவில் மிளகாயை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மிளகாய் அரைத்ததாக இருந்தாலும் சரி அல்லது முழுதாக இருந்தாலும் சரி, இரண்டு மிளகாய்களும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மூலநோய் நோயாளிகள் மிளகாயை உட்கொண்டால், அவர்களுக்கு அதிக வலி மற்றும் எரியும் பிரச்சினைகள் ஏற்படும்.

3 /4

மூல நோயால் அவதிப்படுபவர்கள் கருப்பு மிளகு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த மசாலாவை உட்கொள்வது மலம் கழிக்கும் போது எரியும் உணர்வை ஏற்படுத்தும். கருப்பு மிளகு இயற்கையில் சூடாக இருக்கும். மூலநோய் நோயாளிகள் இதை உட்கொள்வதால் வயிற்றில் பல பிரச்சனைகள் ஏற்படும், எனவே அதனை தவிர்ப்பது நல்லது.

4 /4

பைல்ஸ் நோயால் அவதிப்படுபவர்கள் இஞ்சியை அதிகம் உட்கொள்ள வேண்டாம். இஞ்சியை உட்கொள்வதால், பைல்ஸ் நோயாளிகளுக்கு மலத்துடன் இரத்தம் வர வாய்ப்புள்ளது. இஞ்சியை உட்கொள்வது வாயு, நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். இஞ்சியை உட்கொள்வதால் இரத்தப்போக்கு ஏற்படுகிறது. பைல்ஸ் நோயாளிகள் தங்கள் உணவில் இஞ்சியைத் தவிர்ப்பது நல்லது.  (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)