ஓய்வு என்பதே இல்லாமல் பணியாற்றும் பிரதமர் மோடி; ரகசியம் என்ன..!!

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணத்தை முடித்து நாடுதிரும்பியுள்ளார். அமெரிக்காவுக்கு மேற்கொண்ட மூன்று நாள் பயணத்தின்போது, 65 மணி நேரத்தில், 20 கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றாலும், அவர் சற்றும் சோர்வடையாமல், வந்ததும் அவர் 
நிகழ்ச்சிகளிலும், முக்கிய கூட்டங்களிலும் கலந்து கொண்டதோடு, இரவில் புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகளை சென்று மேற்பார்வையிட்டார்.  சற்றும் சோர்வடையாமல், பணியாற்றுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

1 /6

பிரதமர் இங்கிருந்து அமெரிக்கா செல்லும் போது, நீண்ட நேர விமான பயணத்தின் போதும், ஓய்வு ஏதும் எடுக்காமல், கோப்புக்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்.  பயணத்தின் போது தங்குவதற்கான செலவை குறைக்க அவர் எப்போதும், இரவு நேரத்தில் தான் பயணத்தை துவக்குவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  மேலும் இதன் மூலம் சென்றடைந்தவுடன் காலையில் இருந்தே நிகழ்ச்சிகளை தொடங்கவும் முடியும் என்பதால், நேரத்தையும் மிச்சப்படுத்தலாம் என்பதால், அவரது பயண திட்டம் அதற்கு ஏற்றவாறு இருக்கும்.

2 /6

தொடர்ச்சியாக அவர் ஏன் நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில் ஓய்வு என்பதை மறக்கடிப்பதற்காகவே, மோடி இத்தனை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருந்தால், மனதில் சோர்வோ, அல்லது ஓய்வு எடுக்க வேண்டும் என்ற எண்ணமோ ஏற்படாது என்பதற்காக அவர் தொடர்ந்து வேளை செய்து கொண்டே இருக்கிறார்.  இது தான் அவர் வேலை செய்யும் பாணி.  

3 /6

அதேபோல் தான் பயணம் மேற்கொள்ளும் நாட்டுக்கும், நமது நாட்டுக்கும் உள்ள நேர வித்தியாசத்தை கணக்கிட்டு செயல்படுவார். அமெரிக்காவில் சென்று சேரும் நேரம் காலை என்பதால் விமானத்தில் தூங்குவதை தவிர்த்தார். அதிகளவில் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை சீராக வைத்திருக்கிறார். 

4 /6

நேற்று முன்தினம் ஐ.நா பொது சபை கூட்டத்தில் பேசிய போது, இந்தியாவிற்கு விமானத்தில் திரும்பி வரும்போதும் அதிகாரிகளுடன், இரண்டு ஆலோசனை கூட்டத்தையும் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்த்தக்கது.வெற்றிகரமாக அமெரிக்கப் பயணத்தை மோடி முடித்து திரும்பியுள்ள கோடி விமான நிலைத்தில் சிறப்பு  வரவேற்பு அளிக்கபட்டது.   

5 /6

கொரோனா வைரஸ், தடுப்பூசி,  பயங்கரவாதம், பருவநிலை மாறுபாடு என பல பிரச்னைகள் குறித்து பேசியுள்ளார். இதற்கு உலக நாடுகள் பெரும் ஆதரவு அளித்துள்ளன. மோடி அமெரிக்க வெள்ளை மாளிகையில் மிக பெரும் விருந்தினராக வரவேற்கபட்டார்.  

6 /6

மோடியின் அமெரிக்க பயணத்தின் மிக முக்கிய  வெற்றி என்பது அமெரிக்காவுக்கு கடத்தபட்ட சிலைகளை மீட்டிருப்பது ஆகும். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தபட்ட அல்லது விற்கபட்ட சுமார் 157 சிலைகளை அமெரிக்க அரசு, ஒப்ப்டைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.