Ezharai vs Gods: இந்த கடவுள்களை வணங்கினால் சனியின் கொடூர பலன்கள் குறையும்

Shani Remedies: ஜோதிடத்தில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார் சனி பகவான். இருந்தாலும், கடவுள்களுக்குக் கட்டுப்பட்டவர் சனீஸ்வரர். இந்த தெய்வங்களை வழிபட்டால், சனியின் அருட்பார்வை நிச்சயம் கிடைக்கும்.

நாம் சனி தேவருக்கு பயந்தால், அவரோ இந்த கடவுள்களுக்கு மிகவும் பயப்படுகிறார். இந்த கடவுளின் பக்தர்களை சனீஸ்வரர் பாதிப்பதில்லை. எந்த தெய்வத்தை வணங்கினால் சனியின் தண்டனையை அனுபவிக்க வேண்டியதில்லை? தெரிந்து கொள்வோம்.

1 /5

சனி தேவரின் குருவாகக் கருதப்படும் சிவபெருமானின் பக்தர்களை, சனீஸ்வரர் ஒன்றும் செய்யமாட்டார். சிவ பெருமானை வணங்குபவரை, சனி ஒன்றும் செய்வதில்லை

2 /5

கிருஷ்ண பகவான் சனியின் அதிபதி. சனி பகவான் கிருஷ்ணரை தரிசனம் செய்ய கோகிலா வனத்தில் கடும் தவம் செய்தார் என்பது நம்பிக்கை. அப்போது கிருஷ்ணர் இந்த காட்டில் காக வடிவில் சனிதேவரை தரிசனம் செய்தார்.

3 /5

சனி தேவன் எப்போதும் ஹனுமாரைக் கண்டு பயப்படுகிறார். ஹனுமானை வணங்கும் பக்தர்களின் பாவங்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகுகின்றன. அனுமாரின் பக்தர்களை ஒருபோதும் சனீஸ்வரர் தீண்டுவதில்லை.

4 /5

சூரியன் மற்றும் அவரது இரண்டாவது மனைவி சாயா ஆகியோரின் மகன் சனி என்பது புராண நம்பிக்கை ஆகும். எனவே, சூரியனை வழிபட்டால், சனியின் அருளாசி கிடைக்கும்

5 /5

வன்னி மரத்தை வழிபட்டால் சனீஸ்வரர் உங்களது பாவங்களை மன்னிப்பார் (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)