Sun Venus Conjunction 2022: வேத ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களின் இயக்கமும் நிலையும் அவ்வப்போது மாறுகிறது. ஜோதிடத்தில், சுக்கிரன் ஆடம்பரம், செல்வம், காதல் மற்றும் செழுமை ஆகியவற்றின் காரக கிரகமாக கருதப்படுகிறது. சுக்கிரன் 31 ஆகஸ்ட் 2022 அன்று சிம்ம ராசிக்குள் நுழைந்தார். கிரகங்களின் ராஜாவான சூரியன் ஏற்கனவே தனது சொந்த ராசியான சிம்மத்தில் இருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில், சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் பல ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். எனினும், இந்த சேர்க்கயால் சில அனுகூலமற்ற பலன்களை பெறப்போகும் சில ராசிகளும் உள்ளன. இந்த ராசிகள் இந்த கலாத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். சூரியன் சுக்கிரன் சேர்க்கை காலத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கடக ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் பெரிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். இதைத் தவிர முக்கியமான எந்த பணிகளையும் இப்போது செய்ய வேண்டாம். இந்த காலத்தில் முக்கிய பணிகளை செய்தால், நஷ்டம் மற்றும் சேதத்தை சந்திக்க வேண்டி வரலாம். குடும்பத்தில் யாரேனும் திடீரென்று ஏதேனும் நோயால் பாதிக்கப்படலாம் என்பதால் குடும்ப உறுப்பினர்களை கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும். நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரலாம். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தவும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த கலாத்தில் நிதி ஆதாரத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். வாகனம் போன்றவற்றை வாங்க நினைத்தால் அதற்கு இந்த நேரம் சரியில்லை. முக்கியமான வீட்டு வேலைகளை இந்த நேரத்தில் நிறுத்தி வைப்பது நல்லது. கிரக தோஷம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படும். இந்த கடினமான நேரத்தில் பொறுமையாக இருங்கள்.
சூரியன் கன்னி ராசியில் கோச்சாரம் செய்வதால், கும்ப ராசிக்காரர்கள் பல சர்ச்சைகளை சந்திக்க நேரிடும். இந்த காலத்தில் உங்கள் பேச்சை குறைத்துக்கொள்ளுங்கள். இந்த நேரத்தில் நீங்கள் சட்டவிரோத செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். உடல்நலம் பாதிக்கப்படலாம். எனவே, ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி, உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையின் போது, மிதுன ராசிக்காரர்கள் தேவையற்ற வேலைகளால் மன அழுத்தத்தை சந்திக்க வேண்டி வரும். தொழில்-வியாபாரத்தில் சிரமங்கள் வரலாம். வியாபாரத்தில் நஷ்டம் வரலாம். ஆகையால் செய்யும் அனைத்து பணிகளிலும் அதிகப்படியான கவனத்துடன் இருப்பது நல்லது.