ஐபிஎல்லில் இந்த அணிக்காக விளையாட விரும்புகிறேன்! ஓப்பனாக பேசிய ரின்கு சிங்!

ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், கொல்கத்தா அணி தன்னை தக்க வைத்து கொள்ளவில்லை என்றால் எந்த அணியில் விளையாட விரும்புகிறேன் என்பதை தெரிவித்துள்ளார் ரிங்கு சிங்.

 

1 /6

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் முக்கியமான ஒரு வீரராக ரின்கு சிங் இருந்து வருகிறார். 2018ம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் 80 லட்சத்துக்கு அணியில் இருந்தார்.   

2 /6

2017ல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தாலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு 2018ல் கொல்கத்தா அணியில் 4 போட்டிகள், 2019ல் 5 போட்டிகள், 2020ல் 1 போட்டியில் வாய்ப்பு கிடைத்தது.   

3 /6

ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய பிறகு இந்தியாவின் டி20 மற்றும் ஒருநாள் அணியில் இடத்தை பிடித்தார் ரிங்கு சிங். 2024 டி20 உலகக் கோப்பை அணியில் ரிசர்வ் பிளேயராக இடம் பெற்று இருந்தார்.   

4 /6

இருப்பினும் 2022 மெகா ஏலத்தில் ரிங்குவை மீண்டும் ஒப்பந்தம் செய்தது கேகேஆர் அணி. ஐபிஎல் 2023ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்ஸ் அடித்து புகழின் உச்சிக்கு வந்தார்.   

5 /6

பிறகு ஐபிஎல் 2024ல் ரிங்கு சிங் 14 போட்டிகளில் விளையாடி 168 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்நிலையில் அடுத்த ஆண்டு மெகா ஏலத்தில் கேகேஆர் அணி அவரை தக்க வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  

6 /6

இந்நிலையில் கேகேஆர் அணி தன்னை தக்க வைக்கவில்லை என்றால், ஆர்சிபி அணியில் விளையாட விரும்புகிறேன் என்று ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ஏனெனில் விராட் கோலி அந்த அணியில் இருப்பதால் விளையாட விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.