டி20 உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 பிரிவில் இந்தியா பங்களாதேஷ் அணிகள் இன்று மோதின. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதி சுற்று வாய்ப்பு பிரகாசமாகி விடும் என்ற நிலையில் களமிறங்கியது.
இந்த போட்டிக்கு முன்பாக கருத்து தெரிவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா, இந்த தொடரில் இந்திய அணி தோல்வியே பெறாமல் விளையாடி வருவதால், வங்கதேசம் அணி பெரிய அச்சுறுத்தலை கொடுக்காது என்று தெரிவித்திருந்தார்.
வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கும் விராட் கோலி ரோகித் சர்மா ஆகியோர் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைப்பார்கள் என்று பிரையன் லாரா பெரும் நம்பிக்கையுடன் கூறியிருந்தார். ஆனால், அவரின் இந்த கணிப்பை ரோகித் - விராட் கோலி தூள்தூளாக்கியது. இவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 39 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
லாரா பேசும்போது, இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்தாலும் சரி, இரண்டாவது பேட்டிங் செய்தாலும் சரி விக்கெட் இழப்பின்றி நூறு ரன்கள் சேர்ப்பார்கள். வங்கதேச அணியில் முஸ்தபிசுர் ரஹ்மான் நல்ல பவுலராக இருந்தாலும், இந்திய அணி அவரை எளிதில் சமாளித்து விடும். இந்திய அணி தற்போது அனைத்து அணிக்கும் எதிராக சிறப்பாக விளையாடி வருகிறது என்றெல்லாம் தெரிவித்திருந்தார்.
மேலும், இன்றைய ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்தியா விழித்தும் என்று நம்புகிறேன். இந்தியாவிடம் தொடக்க ஜோடி மட்டும் தான் குறையாக இருக்கிறது.அதனை வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்தியா சரி செய்து விடும். இந்திய அணிக்கு வங்கதேசம் ஆபத்து எதையும் கொடுக்காது. தற்போது தொடர் இறுதிக் கட்டத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார்.
மேலும், இந்திய அணி தற்போது தங்களுடைய தொடக்க வீரர்கள் குறையை மட்டும் தீர்த்து விட்டால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நான் அதை ஒரு பிரச்சனையாகவே கருத மாட்டேன். ஏனென்றால் உலகின் சிறந்த இரண்டு கிரிக்கெட் வீரர்கள் தற்போது இந்தியாவுக்கு தொடக்க ஜோடியாக களம் இறங்கி இருக்கிறார்கள் என்று பிரையன் லாரா கூறியிருந்தார்.
இப்படி லாரா பேசியதற்காக கூட ரோகித்- விராட் கொஞ்சம் சிறப்பாக ஆடியிருக்கலாம். ஆனால், ஒரு அணியாக வங்கதேம் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடினர். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்து, வங்கதேசம் அணிக்கு சவாலான ஸ்கோரை நிர்ணயித்தனர், ஹர்திக் பாண்டியா மட்டும் சிறப்பாக ஆடி 27 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.
இதில் இந்தியாவின் சிறந்த இரண்டு வீரர்கள் ரன்கள் சேர்க்க வேண்டும் என்றால் அது விராட் கோலியும், ரோகித் சர்மாவும் மட்டும்தான். அது மட்டும் நடந்தால் அனைத்துமே இந்திய அணியில் சரியாக வந்து அமைந்துவிடும். இந்த உலகக் கோப்பை தொடரில் எந்த அணியுமே பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தவில்லை. இதற்கு காரணம் ஆடுகளத்தின் தன்மை தான் எனவும் லாரா கூறியிருந்தார்..
இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் தொடக்க வீரர்கள் மட்டும் பெரிய அளவில் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை என்பதற்கும் லாரா கருத்து தெரிவித்திருந்தார்.