ரோஸ் வாட்டரை தினமும் பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா?

ரோஜாப்பூவில் இருந்து தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டரை நீங்கள் தினமும் முகத்திற்கு பயன்படுத்தினால் பலவிதமான சரும நன்மைகளை பெற்று முகப்பொலிவை பெறலாம்.

 

1 /5

ரோஸ் வாட்டரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, எரிச்சலால் முகத்தில் ஏற்படும் சிவப்பை குறைக்கிறது. இது முகத்திலுள்ள அழுக்குகளை சுத்தப்படுத்தி முகப்பருவை நீக்குகிறது.  அடைபட்ட துளைகளில் குவிந்துள்ள எண்ணெய் மற்றும் அழுக்குகளை அகற்ற உதவுகிறது.  

2 /5

ரோஸ் வாட்டரில் சருமத்தைப் பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.  இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் சரும செல்களை வலுப்படுத்தி, சரும திசுக்களை மீண்டும் உருவாக்குகிறது.  

3 /5

ரோஸ் வாட்டர் சருமத்தின் pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது.  இதனை நீங்கள் தடவுவதால் முகம் புத்துணர்ச்சி அடைந்து முகம் பொலிவான தோற்றத்தை பெற்று முகத்திலுள்ள அதிகப்படியான எண்ணெயையும் கட்டுப்படுத்தப்படும்.  

4 /5

ரோஸ் வாட்டர் பல அழகுப் பொருட்களில் காணப்படுகிறது, இதனை அனைத்து வயதினரும் பயன்படுத்தலாம்.  ரோஸ் வாட்டர் பயன்படுத்துவதால் முகத்தில் வரும் மெல்லிய கோடுகள், கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் போன்றவை தடுக்கப்படுகிறது.  இது சருமத்தை ஹைட்ரேட் செய்ய உதவுவதோடு, சரும வறட்சியையும் போக்குகிறது.  

5 /5

ரோஸ் வாட்டரில் ஆண்டிசெப்டிக் பண்புகள் அதிகமாக இருப்பதால், இது நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் உதவுகிறது.  இயற்கை சிகிச்சைகள் மற்றும் வீட்டு வைத்தியங்களில் ரோஸ் வாட்டர் சேர்க்கப்படுகிறது.