Navratri 2024 Concluding Day : ஒன்பது நாட்களாக அன்னையை ஆராதித்து ஆடிப்பாடி தொழுது, பூஜித்து இன்றுடன் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை செய்துவிட்டோம். நாளை விஜயதசமியுடன் நவராத்திரியின் கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்துவிடும்...
Ayudapuja & Saraswati Pooja Today : தீமைகளை அழித்து உலகை உய்விக்க ஆதிசக்தி, ருத்ர ரூபம் எடுத்து அசுரர்களை அழித்து மகிஷாசுரமர்த்தினி ஆனார். இந்த நவயுகத்திலும் ஏன் சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை கொண்டாடுகிறோம்?
இன்றுடன் இந்த ஆண்டு நவராத்திரி கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்துவிட்டன. நாளை விஜயதசமி வித்யாரம்பம் களைகட்டும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முதல், புதிய தொழில் தொடங்குவது, கலைகளை கற்கத் தொடங்குவது என நாளை மிகவும் முக்கியமான நாள்
விஜயதசமியில் தொடங்கும் அனைத்துக் காரியங்களும் நல்லபடியாக நடைபெறும், குறிப்பாக, கல்வி கற்கத் தொடங்குவது, புது விஷயங்களைத் தொடங்குவது நல்லது என்பது நம்பிக்கை
நவராத்திரியின் எட்டாம் நாள் அன்னை, அசுரர்களை வதம் செய்துவிட்டு, ஆயுதங்களை கைவிட்டார், அவற்றுக்கு பூஜை செய்து சாந்திப்படுத்துவது என்பது சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடுவதன் வரலாறு
சரஸ்வதி பூஜை சரி. ஆனால், தொன்று தொட்டு வரும் வழக்கமான பல விஷயங்களை நாம் மாற்றிக் கொண்டே இருக்கும்போது அன்னை ஆயுதங்களை கைவிட்டதால் கொண்டாடப்படும் ஏன் ஆயுத பூஜையை மட்டும் இன்றும் கொண்டாட வேண்டும் என்று பலருக்கு கேள்வி எழலாம்
அதற்கான அருமையான விளக்கம் என்ன தெரியுமா? ஆயுதம் என்பது ஒரு செயலை செய்ய பயன்படும் கருவி தான்
இன்று ஆயுதம் என்பது ஒருவரின் மூலதனம். அதாவது மாணவர்களுக்கு கல்வி பயில உதவும் கருவிகள்
தொழில் செய்பவர்களுக்கு அவர்களின் தொழிலில் பயன்படுத்தும் கருவிகள் ஆயுதம் என்று சொல்லலாம். அதேபோல, ஒரு வாகனத்தை வைத்திருப்பவருக்கு அது ஒரு கருவி தானே? எனவே, தான் ஆயுத பூஜை நாளன்று அனைத்துவிதமான கருவிகளுக்கும் பூஜை செய்வதை இன்றும் தொடர்கிறோம்
இன்று நாம் பயன்படுத்தும் கருவிகளுக்கு பூஜை போட்ட பிறகு, அவற்றை பயன்படுத்தாமல் நாளை தான் பயன்படுத்த வேண்டும் என்பது வழக்கம். ஏனென்றால், இன்று அந்த கருவிகளுக்கு ஓய்வு கொடுக்கும் நாள்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது