சாதனை படைத்த டங்கி ட்ரைலர்! 24 மணிநேரத்தில் இவ்வளவு வியூவ்ஸ்?

Dunki Trailer: ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து  தயாரித்துள்ள டங்கி படம் டிசம்பர் 21ம் தேதி வெளியாகிறது.

 

1 /5

24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகளைப் பெற்ற ஒரே இந்தி திரைப்படமாக இந்தியத் திரையுலகில் சாதனை படைத்துள்ளது “டங்கி” டிராப் 4 டிரெய்லர்!    

2 /5

ஷாருக்கான் டங்கி படத்தின் மூலம் மீண்டு மொருமுறை சாதனை இந்த ஆண்டு நிகழ்த்தியுள்ளார்.  டங்கி டிராப் 4 (டிரெய்லர்) வெளியான வேகத்தில் பெரும் சாதனை படைத்து வருகிறது.   

3 /5

ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஷாருக்கானுடன் போமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் நடித்துள்ளனர்.   

4 /5

தனது சொந்த சாதனைகளை முறியடிப்பதில் திரையுலகின் வல்லவராக அறியப்படும் ஷாருக், சமீபத்தில் மெகா ஹிட்டான ஜவானிலும் இதையே செய்திருந்தார், தற்போது டங்கி மூலன் மீண்டுமொரு முறை அந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.   

5 /5

டங்கி டிராப் 4 (டிரெய்லர்) வெளியானதிலிருந்தே பார்வையாளர்களின் அன்பைப் பெற்று, எட்டுதிக்கும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறது.  நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டங்கி திரைப்படம் அன்பு மற்றும் நட்பின் பெருமையை விவரிக்கும் காவியமாகும்.