Gold Price Today: தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் தற்போது உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை தற்போது ரூ. 58,000 ஆக உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது அதிகமாக உயர்ந்துள்ளது. திருமணம் மற்றும் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு தங்கம் வாங்க இருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கத்தின் மீதான வரியை குறைத்து அரசு உதவ முயற்சித்தாலும், இன்னும் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்போதே தங்கம் வாங்க வேண்டுமா அல்லது விலை குறையும் வரை காத்திருக்க வேண்டுமா என்று மக்கள் யோசித்து வருகின்றனர்.
அக்டோபர் மாதம் தொடக்கத்தில், ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 56,000 ஆக இருந்தது. இப்போது அது ரூ. 58,000 ஆக உயர்ந்துள்ளது. இன்று அக்டோபர் 21ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து, தற்போது ரூ. 7,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 160 ரூபாய் உயர்ந்து, 58,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் தங்கம் விலையும் ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,695 ஆக உள்ளது. 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.62,040 ஆக உள்ளது.
வெள்ளியின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.107 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,07,000 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.