Nellikai For Overall Beauty: உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை தனக்குள் பொதிந்து வைத்திருக்கும் நெல்லிக்காயின் மகத்துவம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
தலைமுடிக்கும், சருமத்திற்கும் அழகிற்கும் நெல்லிக்காயை சுலபமாக எப்படி பயன்படுத்துவது? தெரிந்துக் கொள்ளுங்கள்
நெல்லிக்காய் பல வழிகளில் நமக்கு நன்மை பயக்கும். சமைத்தோ, பச்சையாகவோ, காய வைத்தோ, சூரணமாகவோ, தேனில் கலந்தோ, நெல்லிக்காய் ஜூஸாகவோ எப்படி பயன்படுத்தினாலும், தனது மருத்துவ நன்மைகளை கூடாமல் குறையாமல் கொடுக்கும் ஒரே உணவுப்பொருள் நெல்லிக்காய்.
வீட்டு வைத்தியமாக பயன்படுத்தப்படும், நெல்லிக்காய் ஆயுர்வேதம் உட்பட உலகின் அனைத்து மருத்துவங்களிலும் முக்கியமான பொருளாக விளங்குகிறது.
நெல்லிக்காயை கடித்து உண்பது ஒரு சுவை என்றால், நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது மற்றுமொரு சுவையான வழி. இரண்டு நெல்லிக்காயை எடுத்துக் கொண்டு, அதில் சிறிது கறிவேப்பிலை, ஒரு துண்டு இஞ்சி, கொஞ்சம் வெல்லம், 5 மிளகு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொண்டு அதில் நீர் கலந்து பருகினால் எந்தவிதமான நோயும் அண்டாது
இந்த நெல்லிக்காய் ஜூஸை வாரம் 4 முறை குடித்து வந்தால் போதும், அழகான கூந்தலுக்கு நீங்கள் தான் சொந்தக்காரர்... நெல்லிக்காயில் உள்ள தாதுக்கள் நமது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவுகிறது. முடி விரைவாக நரைக்காது. நெல்லிக்காயில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன
பார்வையை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் உதவும் நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனால், கண் பார்வை நன்றாக இருக்கும். அதோடு கண் தசைகளை பலப்படுத்தும் நெல்லிக்காய் கண்புரையைத் தடுக்கிறது
தலைமுடிக்கு எவ்வளவு நன்மை பயக்கிறதோ, அந்த அளவு சருமத்திற்கும் நன்மை பயக்கும். நெல்லிக்காய் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சருமத்தின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது
நெல்லிக்காயை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது, உங்கள் தோல், முடி மற்றும் ஆரோக்கியத்திற்கு ஒரே நேரத்தில் நன்மை பயக்கும்