மனித குலம் தழைத்தோங்க, நியாயம் நிலைக்க, அதர்மம் ஒழிய, தர்மம் தழைக்க, கடவுள் அவ்வப்போது பல அவதாரங்களை எடுத்துள்ளார். அவற்றில் சில அவதாரங்களையும் அவர்கள் தோன்றிய இடங்களையும் பார்க்கலாம்.
அயோத்தி மன்னன் தசரதன் புத்திர காமேஷ்டி யாகம் செய்து பெற்றெடுத்த பிள்ளை ராமன்! தந்தை சொல்லைத் தட்டாத தனயன். ராமன் பிறந்த இடம் அயோத்தி!!
கார்மேக வர்ணன் கண்ணன், புல்லாங்குழல் இசையால் அனைவரையும் சிறைபடுத்தும் அந்த கள்வன் பிறந்தது ஒரு சிறையில்தான். மதுரா சிறையில்தான்!! பாரதப் போரில் சாரதியாய் நின்று தர்மம் தழைக்கச்செய்தார் இந்த சாரங்கபாணி!!
ராம பக்திக்கு ஒப்பில்லா எடுத்துக்காட்டாக இருக்கும் ஹனுமான் பிறந்து, விளையாடி தன் குழந்தைப் பருவத்தில் மகிழ்ந்து குலாவிய இடம் – ஹம்பி. அன்று இந்த ஊர் கிஷ்கிந்தா என்று அழைக்கப்படது.
கண்ணனை தன் நினைவில் கொண்டு, சதா அவன் சிந்தனை கொண்டு, வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து, நாராயணனை மணக்கும் கனா கண்ட கோதை நாச்சியார் பிறந்த புண்ணிய பூமி ஸ்ரீவில்லிபுத்தூர்.
தன் பரம பக்தன் தன் தந்தையிடம் தூணிலும் என் நாராயணன் இருப்பார் என கூறியதை மெய்ப்பிக்கும் வண்ணம் மகாவிஷ்ணு தூணைப் பிளந்து ‘நான் தூணிலும் இருப்பேன் துரும்பிலும் இருப்பேன்’ என காட்டிய இடம், அஹோபிலம்!