Stay Away From These Toxic People : நாம், வாழ்வில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால், சிலரை நம் வாழ்வை விட்டு விலக்கி வைக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். அப்படி தள்ளி வைக்கப்பட வேண்டியவர்கள் யார் யார் தெரியுமா?
Stay Away From These Toxic People : ஒரே கையில் இருக்கும் ஐந்து விரல்களும், எப்போதும் ஒன்றாக இருந்து இருப்பது இல்லை. அதே போல, ஒரே உலகில் வாழும் மனிதர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒருவர், மிகவும் நல்லவராக இருந்தால், அவருடன் இருக்கும் ஒரு நண்பர் கேடு கெட்டவராக இருப்பார். யார், எப்படி, எந்த நோக்கத்துடன் நம்மிடம் பழகுகின்றனர் என்பதை பார்த்து பழக வேண்டிய பொறுப்பு நம்மிடம்தான் இருக்கிறது. எனவே, உங்கள் வாழ்க்கையில் இருந்து நீங்கள் ஒதுக்கி வைக்க வேண்டிய டாக்ஸிக்கான நபர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
சுய பரிதாபம் கொண்ட நபர்கள்: ஒரு சிலர், தங்கள் வாழ்வில் என்ன நல்ல விஷயங்கள் நடந்தாலும் தவறான விஷயங்களை மட்டும் நினைத்துக்கொண்டு தன்னைத்தானே பாவம் என நினைத்துக்கொள்வர். அப்படிப்பட்ட நபர்களிடம் இருந்து விலகியிருப்பது நல்லது.
ஏமாற்று பேர்வழி: ஒரு சிலர், நாம் என நினைக்கிறோம் என்பதையே மாற்றி, அவர்களுக்கு ஏற்றவாறு நம்மை யோசிக்க வைத்து ஏமாற்றுவர். அந்த மாதிரியான ஆட்களிடம் இருந்து விலகியிருத்தல் மனதுக்கு நல்லது.
அவநம்பிக்கை கொண்டவர்கள்: ஒரு சிலர், எல்லாவற்றிலும் அவநம்பிக்கையான பார்வையைக் கொண்டவர்களாக இருப்பர். இவர்கள், தான் நெகடிவாக யோசிப்பது மட்டுமல்லாது தன்னிடம் பேசுபவர்களையும் அப்படியே யோசிக்க வைப்பர்.
தன்னை பற்றி மட்டுமே யோசிப்பவர்: எந்த சந்தோஷமான அல்லது சோகமான விஷயங்களை இது போன்ற மனிதர்களிடம் சென்று கூறினாலும், அவர்கள் “எனக்கும் அப்படித்தான்..ஒரு முறை என்னாச்சுன்னா..” என்று அவர்களின் கதையை சொல்ல ஆரம்பித்து விடுவர். அவர்கள் தேவையை மட்டும் அனைத்து இடங்களிலும் முதன்மை படுத்துவர். அது போன்ற ஆட்களை நம்பவேக்கூடாது.
புறணி பேசுபவர்: உங்களிடம் வந்து பிறரை பற்றி புறணி பேசுபவரை எப்போதும் நம்பவே கூடாது. இது போன்ற நபர்கள் நீங்கள் இல்லாத சமயத்தில் உங்களை பற்றியும் எங்காவது சென்று புறணி பேச வாய்ப்புள்ளது.
பொறாமை/ ஏக்க குணம் கொண்டவர்கள்: உங்களை பார்த்து எப்போதும் ஏக்கம் கொள்பவர்கள் மற்றும் பொறாமை கொள்பவர்களை அருகில் வைத்துக்கொள்ளாதீர்கள்.
டிராமா போடுபவர்கள்: ஒரு சிலர், சிறிய விஷயமாக இருந்தாலும் அதை பெரிதாக பேசுவர். அது போல டிராமா போடுபவர்களை அருகில் வைத்திருக்க வேண்டாம்.
எப்போதும் விமர்சனம் செய்பவர்: நீங்கள் உடுத்தும் ஆடைகளை, செய்யும் செயல்களை, பேசும் விஷயங்களை என எப்போதும் ஒருவர் குறை கூறிக்கொண்டே இருப்பர். அது போன்ற ஆட்களை எப்போதும் தள்ளியே வைத்திருக்க வேண்டும்.