வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டுமானால் எளிதில் செரிக்கக்கூடிய உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.
இஞ்சியில் பாக்டீரியா மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டுவர வயிறு வலி போன்ற வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் குணமடையும்.
நார்ச்சத்து மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாக விளங்கும் ஆளி விதைகள் குடல் மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
அரிசி, ஓட்ஸ் மற்றும் டோஸ்ட் போன்ற மிதமான கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட உணவு வகைகள் வயிற்றுப்போக்கினை சரிசெய்கிறது. மேலும் இது ஜீரணத்தையும் எளிதாக்குகிறது.
புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, உங்கள் குடலுக்கு நல்லது. இது வாயு, வீக்கம் அல்லது ஒழுங்கற்ற குடல் இயக்கங்களை சரிசெய்கிறது.
வாழைப்பழத்தில் ப்ரீபயாடிக் பண்புகள் அதிகம் உள்ளது. இதனை சாப்பிடுவதால் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனை குணமடையும்.