Heart Attack Symptoms : ஹார்ட் அட்டாக் என்ற வார்த்தை ஒரு காலத்தில் பயங்கரமானதாக இருந்த நிலை மாறி, தற்போது இளம் வயதினருக்கும் வரும் சிக்கலாக மாறிவிட்டது. வாழ்க்கை முறையே நோய்களுக்கு பிரதானமான காரணம்...
Identify Symptoms Of Heart Attack : ஆனால், எந்தவொரு நோயும் ஒரே நாளில் வந்துவிடுவதில்லை என்பது மாரடைப்புக்கும் பொருந்தும். மாரடைப்பு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அது பல அறிகுறிகளை காட்டுகிறது. அந்த அறிகுறிகள் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...
இதயம் தொடர்பான நோய்கள் வராமல் இருக்க, உணவு மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்துவது முக்கியம். அதுமட்டுமல்ல, வழக்கத்திற்கு மாறாக உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்
இதயத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அது பற்றிய சமிக்ஞைகள் உடலில் தோன்றிவிடும்
மாரடைப்பின் அறிகுறிகளைப் பற்றி பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை. உடலில் ஏற்படும் மாற்றங்களையும் அறிகுறிகளையும் கவனித்தால், மாரடைப்பை பெருமளவு தடுக்கலாம்
மாரடைப்புக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, வேலையே செய்யாவிட்டாலும் மிகவும் சோர்வாக இருக்கும்
மாரடைப்புக்கு முன், சில நாட்களாக இரவில் தூங்குவதில் சிரமம் ஏற்படலாம்.
மாரடைப்பு வருவதற்கு சில நாட்கள் முன்னதாகவே, வியர்வை அதிகமாக வரும்
தூங்கும் போதும், வழக்கமாகவும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படும்
வயிற்றில் அசெளகரியமான உணர்வு, நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்