‘தலைநகரம்’ பட நாயகியை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்கார்னு பாருங்க..

Thalai Nagaram Actress Jyothirmayi Latest Photos : தலைநகரம் படத்தின் கதாநாயகி ஜோதிர்மயியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

1 /7

2006ஆம் ஆண்டு வெளியான, தலைநகரம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர், ஜோதிர்மயி. இவரது தற்போதைய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

2 /7

ஜோதிர்மயி, மலையாள சினிமாவில் இருந்து தமிழ் திரையுலகிற்குள் வந்தவர். மாடலிங் துறையில் இருந்த இவரை சினிமா அப்படியே இழுத்துக்கொண்டது.

3 /7

இவர், 2004ஆம் ஆண்டு நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 6 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இவர்கள் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். 

4 /7

விவாகரத்திற்கு பிறகு, ஜோதிர்மயி இயக்குநரும் நடிகருமான அமல் நீரத்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் 2015ஆம் ஆண்டு நடைப்பெற்றது. 

5 /7

ஜோதிர்மயியின் தற்போதைய புகைப்படம்தான் இணையத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. தலைநகரம் படத்தில் நடித்த போது எடுத்த இவரது புகைப்படத்தையும் இவரது தற்போதைய புகைப்படத்தையும் ரசிகர்கள் ஒப்பிட்டு வைரலாக்கி வருகின்றனர். 

6 /7

ஜோதிர்மயி, மலையாள திரையுலகில் இன்னும் பிரபலமாக இருக்கிறார். இவர் ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர், நஸ்ரியாவுடன் 2020ஆம் ஆண்டு எடுத்து வெளியிட்டிருந்த புகைப்படமும் அப்போது வைரலானது. 

7 /7

ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்த இவர், தற்போது சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் அடையாளம் தெரியாமல் மாறியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.