இந்தியாவில் உள்ள சில ரயில்வே ஸ்டேஷன்களில் பாஸ்போர்ட், விசா இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும்
இந்தியாவில் இருக்கும் ரயில்களுக்கு பாஸ்போர்ட், விசா தேவையா? என்ற வியப்பான கேள்வி உங்களுக்கு எழலாம். இந்த ரயில் நிலையங்கள் எல்லாமே இந்தியாவின் அண்டை நாடு எல்லைகளுக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கின்றன. அந்த ரயில் நிலையங்களில் இருந்து அண்டை நாடுகளுக்கு செல்லும் ரயில்களில் பயணிக்க பாஸ்போர்ட் விசா கட்டாயம் அவசியம்.
மலிவு விலையில் வெளிநாடு செல்ல வேண்டும் என விரும்புபவர்கள் இந்த ரயில் நிலையங்களுக்கு சென்ற மிக குறைந்த விலையில் வெளிநாடு பயணத்தை மேற்கொள்ள முடியும். அதற்கு உங்களிடம் சரியான பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இருக்க வேண்டும். சரி, அப்படியான ரயில் நிலையங்கள் இந்தியாவில் எங்கெங்கெல்லாம் அமைந்திருக்கின்றன என்பதை பார்க்கலாம்.
பெட்ராபோல் ரயில் நிலையம் ; மேற்கு வங்கத்தில் இருக்கும் மற்றொரு ரயில் நிலையம் பெட்ராபோல் ரயில் நிலையம். இங்கிருந்தும் வங்கதேசத்து செல்லலாம். மேற்கு வங்க எல்லையில் அமைந்துள்ள இந்த நிலையம், இந்தியா-வங்காளதேச எல்லையில் ஒரு போக்குவரத்து மையமாக செயல்படுகிறது. இங்கிருந்து வங்காளதேசத்தின் குல்னாவை அகல பாதை வழியாக செல்லும். இங்கிருந்து வங்கதேசம் செல்ல வேண்டும் என்றால் பாஸ்போர்ட் விசா அவசியம்.
ஜெய்நகர் ரயில் நிலையம் ; பீகார் மாநிலத்தின் மதுபானி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது ஜெய்நகர் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 39 ரயில்கள் அண்டை நாடான நேபாளத்தின் ஜனக்பூரில் உள்ள குர்தா ரயில் நிலையத்துக்கு இயக்கப்படுகிறது. இதேபோல் அந்த மாநிலத்தில் இருந்து நேபாளத்துக்கு ரயில்கள் செல்லும் இன்னொரு ரயில் நிலையம் பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் ஜோக்பானி நகரில் அமைந்துள்ளது. இங்கிருந்தும் நேபாளம் செல்லலாம்.
ராதிகாபூர் ரயில் நிலையம் ; வங்கதேச எல்லைக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கும் ரயில் நிலையம் ராதிகாபூர் ரயில் நிலையம். மேற்கு வங்காளத்தில் உள்ள தினாஜ்பூரில் அமைந்துள்ள இந்த நிலையம் இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையே ஒரு போக்குவரத்து மையமாக செயல்படுகிறது. வங்கதேச எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மற்றொரு ரயில் நிலையம் ஹல்திபாரி ரயில் நிலையம்.
அட்டாரி ரயில் நிலையம் ; இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் மிகவும் பிரபலமான, பல வரலாறுகளை கொண்டிருக்கும் ரயில் நிலையம் தான் அட்டாரி ரயில் நிலையம். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டதிதல் அமைந்திருக்கும் இந்த நிலையத்திலிருந்துதான் சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் பாகிஸ்தானுக்கு இயக்கப்படுகிறது. இருப்பினும், 2019 ஆம் ஆண்டு முதல், இந்த ரயில் இந்தியாவால் நிறுத்தப்பட்டது. இந்த நிலையத்திலிருந்து ரயிலில் ஏற விரும்பும் பயணிகள் பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட அத்தியாவசிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.