காதலிக்கப் போறீங்களா... அப்போ இந்த 5 பழக்கங்களை தூக்கி வீசுங்க!

Love Relationship Tips: புதிதாக ஒரு காதல் உறவுக்குள் நீங்கள் செல்ல இருக்கிறீர்கள் என்றால் உங்களிடம் இந்த 5 பழக்கவழக்கங்கள் இருந்தால் அதனை உடனே கைவிட்டுவிடுங்கள். அவை குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

காதல் உறவில் ஒருவர் செல்லும் போது அவர் தனியாக இருந்தபோது பின்பற்றிய அதே பழக்கவழக்கங்களையே தொடர்ந்து சில சிக்கல்களை ஏற்படுத்தும். அதைதான் இங்கு காணப்போகிறோம்.

1 /8

ஆரோக்கியமான காதல் உறவுக்கு ஆண் - பெண் இரண்டு பேர் தரப்பிலும் சில நகர்வுகளை செய்ய வேண்டும். அதுவும் புதிதாக காதல் உறவுக்குள் செல்பவர்கள் முன்கூட்டியே சில விஷயங்களை திட்டமிட வேண்டும்.   

2 /8

அந்த வகையில், புதிதாக காதல் உறவுக்குள் செல்லும் ஒருவர், அது ஆணோ, பெண்ணோ உங்களிடம் இருக்கும் இந்த 5 பழக்கவழக்கங்களையும் கைவிட்டே ஆக வேண்டும். இந்த பழக்கவழக்கங்களை நீங்கள் காதல் உறவிலும் தொடர்ந்தால் பிரச்னையே அதிகரிக்கும்.   

3 /8

காதல் உறவில் அதிகம் எதிர்பார்ப்பது மிகவும் பிரச்னைக்குரிய ஒன்று. காதல் உறவில் பார்ட்னரிடம் இருந்து எதிர்பார்க்கலாம், ஆனால் அனைத்து விஷயத்திற்கும் பெரிய எதிர்பார்ப்புகளை வைப்பது சிக்கலை ஏற்படுத்தும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் என்பதால் அவர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம்.   

4 /8

வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதுதான் காதல் உறவில் இருப்பதற்கான அழகு. உங்களின் உணர்வுகள், பிரச்னைகள், எதிர்பார்ப்புகளை வெளிபடுத்த வேண்டும். இல்லையென்றால் கருத்து வேறுபாடுக்கு இது இட்டுச்செல்லும். எப்போதும் எந்த விஷயத்தையும் மறைக்காதீர்கள்.  

5 /8

நம்பிக்கை என்பது காதல் உறவில் மிக முக்கியமான ஒன்றாகும். எதற்கெடுத்தாலும் தப்பு சொல்வதும், அனைத்தையும் எதிர்மறையாக அணுகுவதும் உங்கள் பார்ட்னருக்கு பிரச்னையை ஏற்படுத்தலாம். எனவே, காதல் உறவில் நேர்மறையான விஷயங்களை அதிகமாக்குங்கள்.   

6 /8

அதேபோல், அதிகம் யோசிக்காதீர்கள். இப்படியானால் அது இப்படியாகிவிடுமோ, இது அப்படியாகிவிடுமோ என அதிகமாக யோசிப்பது காதல் உறவில் பதற்றத்தை ஏற்படுத்தும். காதல் உறவில் வரும் பிரச்னைகளை சாதாரணமாக கையாளுங்கள், அதனை அதிகமாக யோசித்து குழப்பிக்கொள்ளாதீர்கள்.   

7 /8

காதல் உறவுக்கு வந்துவிட்டால் உங்கள் பார்ட்னர் சுதந்திரமாக இயங்க ஒப்புக்கொள்ளுங்கள். அவர்களுக்கான இடத்தை அளியுங்கள். அவர்களையும், அவர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதையும் நீங்கள் கட்டுப்படுத்தினால் அது ஆரோக்கியமான உறவாக இருக்காது, அதிருப்தியே மேலோங்கும்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.