சிபில் ஸ்கோர் அடிப்படையிலேயே ஒருவர் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதற்கான சாத்தியம் எவ்வளவு என்பதை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அறிந்து கொள்கின்றன.
பொதுவாக 600க்கும் குறைவாக சிபில் ஸ்கோர் இருந்தாலே வங்கிகள் கடன் கொடுக்க யோசிக்கின்றன. உங்களின் சிபில் ஸ்கோர் நன்றாக இருந்தால் கடன் எளிதாக கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
சிபில் என்பது கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ இந்தியா லிமிடெட் (Credit Information Bureau India Ltd) என்பதன் சுருக்கம் ஆகும். இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான சிபில், தனிநபர்களின் வங்கிப் பர்வர்த்தனைகள் மற்றும் கடன் திரும்ப செலுத்தும் திறன் ஆகியவற்றை வைத்து கிரெடிட் மதிப்பீடுகளை வழங்கும்.
உங்களின் சிபில் ஸ்கோர் நன்றாக இருந்தால் கடன் எளிதாக கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. பொதுவாக 600க்கும் குறைவாக சிபில் ஸ்கோர் இருந்தால் வங்கிகள் கடன் கொடுக்க யோசிக்கின்றன. உங்கள் CIBIL ஸ்கோர் மூலம் நீங்கள் தடைகள் இன்றி வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன் ஆகியவற்றுக்கு நொடியில் அனுமதி பெறலாம்.
சிபில் மதிப்பெண் அதிகமாக இருந்தால், குறைந்த வட்டி விகிதம் மற்றும் செயலாக்க கட்டணம் என கடன் வழங்குபவர்கள் சலுகைகளை வழங்குவார்கள். இதனால், ஆயிரக்கணக்கான பணத்தை சேமிக்கலாம்.
உங்கள் CIBIL ஸ்கோரை அதிகரிக்க சரியான நேரத்தில் பில்களை செலுத்துங்கள். கட்டணத்தை சரியான செலுத்துதல் தொடர்பான விரபரங்கள் கிரெடிட் ஸ்கோரில் மிகப்பெரிய தாக்கத்தை கொண்டுள்ளது. 30 நாள் தாமதம் கூட ஸ்கோரை பாதிக்கலாம். உரிய தேதிகளைத் தவறவிடாமல் இருக்க நினைவூட்டல்கள் மற்றும் ஆடோமேடிக்காக பணம் செலுத்தும் முறையை கடைபிடியுங்கள்.
உங்கள் மொத்தக் கிரெடிட் கார்டு வரம்பில் 30% அல்லது அதற்கும் குறைவான தொகையை மட்டுமே அனைத்து கார்டுகளிலும் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பில்லிங் சுழற்சியிலும் கார்டுகளுக்கான நிலுவை தொகையை முழுமையாக செலுத்துங்கள்.
ஒவ்வொரு கடனும் அல்லது கார்டும் கடினமான கடன் சோதனையை ஏற்படுத்துகிறது. இது தற்காலிகமாக மதிப்பெண்களைக் குறைக்கலாம், குறிப்பாக குறுகிய காலத்திற்குள் அதிகமான கடன் விண்ணப்பங்களை விண்ணப்பித்தால், அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். இன்றியமையாத தேவை ஏற்படும் போது மட்டுமே கடனிற்கு விண்ணப்பிக்கவும்.