ஐபிஎல் தொடரில் அதிக மெய்டன் ஓவர் வீசிய டாப் 5 பவுலர்கள்

ஐபிஎல் தொடரில் அதிக மெய்டன் ஓவர் வீசியவர்களில் அதிகம் இந்திய பவுலர்களே இருக்கின்றனர்

இந்திய அணியின் முன்னாள் வீரரான பிரவீன் குமார் ஐபிஎல் தொடரில அதிக மெய்டன் ஓவர் வீசியவர்களில் முதல் இடத்தில் உள்ளார்.

1 /5

பிரவீன் குமார் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்காக விளையாடியுள்ளார். அவர் மொத்தம் 14 மெய்டன் ஓவர்களை வீசி இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

2 /5

மெய்டன் ஓவர் வீசியவர்கள் பட்டியிலில் இரண்டாம் இடத்தில் இந்திய அணியின் தற்போதைய பந்துவீச்சாளராக இருக்கும் புவனேஷ்வர் குமார் இருக்கிறார். அவர் 10 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார்.  

3 /5

அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் இர்பான் பதான். இர்பான் பதானும் 10 ஓவர்கள் மெய்டனாக வீசி இருக்கிறார்

4 /5

மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி தவல் குல்கர்ணி, 8 ஓவர்களை மெய்டனாக வீசியிருக்கிறார்

5 /5

மற்றொரு மும்பை இந்தியன்ஸ் வீரரான லசித் மலிங்காவும் 8 ஓவர்களை மெய்டனாக வீசியிருக்கிறார். இப்போது ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார்.