Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், இதயம் தொடர்பான நோய்கள், நரம்பு நோய்கள், மாரடைப்பு போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்படலாம்.
உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் உணவு மற்றும் பானங்கள் பெரும் பங்கு வகிக்கிறது. நமது கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அது ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது
கொலஸ்ட்ரால் உடலுக்கு இன்றியமையாதது, ஆனால் அது அதிகமாக இருந்தால், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமானால், உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்
உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது என்பது பல நோய்களை தவிர்க்கவும் அவசியம். கொலஸ்ட்ராலை சமநிலையில் வைத்திருக்கக்கூடிய விஷயங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்
ஓட்ஸ் உணவில் குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது, இது நமக்கு நன்மை பயக்கும். இதில் உள்ள பயோஃப்ளவனாய்டுகள் கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் லினோலெனிக் அமிலம் உள்ள வெந்தயம், கெட்ட கொழுப்பை நேரடியாக தாக்கி கொலஸ்ட்ராலை அதிரடியாக குறைக்கும்
நெல்லிக்காயில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் உதவியுடன், இது கெட்ட கொழுப்பை அகற்ற உதவுகிறது மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
கிரீன் டீயில் உடல் எடையைக் குறைக்க, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த, கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் பல கூறுகள் உள்ளன.