போலீஸ் அதிகாரியாக உதயநிதி ஸ்டாலின்! 'நெஞ்சுக்கு நீதி' புகைப்படங்கள்!

அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தின் புகைப்படங்கள்.

அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தின் புகைப்படங்கள்.

 

1 /6

அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நெஞ்சுக்கு நீதி'.  

2 /6

இப்படத்தில் ஆரி, தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், இளவரசு, மயிலசாமி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.  

3 /6

2019-ம் ஆண்டு அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஹிந்தியில் வெளியாகி வெற்றிநடை போட்ட 'ஆர்டிகிள் 15' படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த படம் சமூக நீதி மற்றும் மனசாட்சி குறித்து பேசுகிறது.  

4 /6

இப்படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.  அதில் உதயநிதி காவல் துறை அதிகாரியாக கம்பீரத்துடன் காட்சியளிக்கிறார்.  மேலும் மிரட்டும் போஸில் ஆரியின் புகைப்படமும் வெளியாகி உள்ளது.

5 /6

இந்த புகைப்படங்களின் மூலம் நடிகர் மயிலசாமி மற்றும் இளவரசு ஆகியோரும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.  

6 /6

இப்படத்தின் தலைப்பானது மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி எழுதிய சுயசரிதையின்  தலைப்பு ஆகும்.