Venus Transit In Libra Zodiac Sign: இன்னும் 9 நாட்களில் சுக்கிரன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்த ராசிகளுக்கு அனைத்திலும் வெற்றி, அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்ப்போம்.
Venus Transit In Libra Zodiac Sign: செல்வச் செழிப்பை அள்ளி வீசும் சுக்கிரன் வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த ராசி மாற்றத்தால் எந்த ராசிகளுக்கு சிறப்பான பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
சுக்கிரன் வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். இந்த சுக்கிரன் தனது ராசியை மாற்றும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் தெரியும். அந்த வகையில் வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.
சுக்கிரனின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இது மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு செல்வ மழை, வெற்றி மழை பொழியும். அந்த ராசிகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் ஆதாயம் உண்டாகும். பொருளாதாரத் துறையில் லாபம் அதிகரிக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். புதிய இடத்தில் வேலை கிடைக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புத்திசாலித்தனம் அதிகரிக்கும். வணிக மற்றும் வர்த்தகத் துறையிலும் முன்னேற்றம் கிடைக்கும். தந்தையுடனான உறவு வலுப்பெறும். புதிய வேலையில் வெற்றி பெறலாம். பணியிடத்தில் ஊக்கத்தை பெறுவீர்கள்.
கும்ப ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
சுக்கிர யோகத்தை பெற, ஓம் அச்வத்வஜாய வித்மஹே.. தனூர் ஹஸ்தாய தீமஹி.. தன்னோ சுக்ரப்ரயோதயாத் என்கிற சுக்கிர காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.