Venus Transit In Virgo On 25 August 2024: ஆகஸ்ட் மாதத்தின் கடைசியில் அழகு, காதல், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் ராசியை மாற்றப் போகிறது.
சுக்கிரன் ஆகஸ்ட் 25 ஆம் தேதி சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழைகிறார். புதனை ஆளும் கன்னி ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அடைவதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும். எனினும் சில ராசிக்காரர்கள், சுக்கிர பெயர்ச்சியால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
நவகிரகத்தில் அழகு, செழிப்பு, ஆடம்பரம், இல்லற சுகத்தை தரக்கூடியவர் சுக்கிர பகவான். சுக்கிர பகவான் தனம், திருமண சுகத்தை தரக்கூடியவர். சுக்கிரன் பொதுவாக மகிழ்ச்சியை தரக்கூடிய கிரகம். அதனால் அவர் நமக்கு நன்மையே செய்வாரே தவிர தீமையை செய்ய மாட்டார்.
நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். அதன்படி ஆகஸ்ட் 25 கன்னி ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், மகிழ்ச்சி தரும் என்று தெரிந்து கொள்வோம்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன் கிடைக்கலாம். இந்தப் பெயர்ச்சியின் பலன் நல்ல அதிர்ஷ்டத்தை தரும். பொருள் வளம் பெருகும். நிலம், கட்டிடம், வாகனம் வாங்கலாம். இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு பயனுள்ள பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் பாராட்டுகளை பெறலாம். வியாபாரிகளுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயம் உண்டாகலாம்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் இந்த சுக்கிர பெயர்ச்சி. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம், இதனால் வருமானமும் கூடலாம். பயண வாய்ப்புகளை பெறலாம்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில் திடீர் நிதி ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். தொழிலதிபர்களுக்கு மிகவும் சாதகமான நேரமாக அமையும். மனைவியின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள்.
சுக்கிர யோகம் பெற, ஓம் அச்வத்வஜாய வித்மஹே.. தனூர் ஹஸ்தாய தீமஹி.. தன்னோ சுக்ரப்ரயோதயாத் என்கிற சுக்கிர காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.