Maths-ல் நூற்றுக்கு நூறு வாங்க, இந்த கோயிலுக்கு வாங்க! 100/100 நிச்சயம்!!

மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கல்வி பாடத்தில் நாட்டம் இருக்கும். சிலருக்கு அறிவியல், சிலருக்கு சமூக அறிவியல், சிலருக்குக் கணிதம் என விருப்பங்கள் மாறுபடலாம். எனினும், அன்று முதல் இன்று வரை பல மாணவர்கள் கண்டு அஞ்சும் ஒரு பாடம் உள்ளது என்றால் அது கணக்கு பாடம்தான்.

மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கல்வி பாடத்தில் நாட்டம் இருக்கும். சிலருக்கு அறிவியல், சிலருக்கு சமூக அறிவியல், சிலருக்குக் கணிதம் என விருப்பங்கள் மாறுபடலாம். எனினும், அன்று முதல் இன்று வரை பல மாணவர்கள் கண்டு அஞ்சும் ஒரு பாடம் உள்ளது என்றால் அது கணக்கு பாடம்தான்.

1 /5

கணிதத்தைப் பார்த்து அச்சப்படும் மாணவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஆனால், கணிதம் மட்டுமல்ல, எந்த பாடத்தையும் பார்த்து அச்சப்பட வெண்டிய அவசியமே இல்லை. அனைத்து விஷயங்களுக்குமே முறையான பயிற்சி என்பதுதான் சரியான தீர்வாகும். விடா முயற்சி நம்மை அனைத்துத் தடைகளையும் தகர்க்க வைக்கும். குறிப்பாக கணிதத்தில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற இந்த கோயிலுக்குச் சென்று வாருங்கள். கை மேல் பலன் கிடைக்கும்.

2 /5

நாமக்கல்லில் ஸ்ரீ நாமகிரித்தாயார் சமேத ஸ்ரீ நரசிம சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வந்து தாயாரின் சன்னிதி முன்னால் நெய் விளக்கேற்றி வேண்டினால், மாணவர்கள் கண்டிப்பாக கணக்கு பாடத்தில் மிக நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள் என்பது உறுதி.

3 /5

தன் கனவில் நாமக்கல்லில் உள்ள நாமகிரித் தாயார் வந்து கணித கோட்பாடுகளையும் சமன்பாடுகளையும் தனக்கு எழுதிக் காட்டி புரிய வைத்ததாகவும், அவற்றின் அடிப்படையிலேயே தன்னால் சிக்கலான பல கணித கோட்பாடுகளை இயற்றவும் கண்டுபிடிக்கவும் முடிந்தது என்றும் கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜன் கூறினார்.

4 /5

சாலை வழி: சாலை வழியாக வந்தால், சேலத்திலிருந்து 50 கி.மீ மற்றும் கரூரிலிருந்து 45 கி.மீ உள்ள நாமக்கல்லில் இக்கோயில் அமைந்துள்ளது. ரயில் வழி: ரயிலில் வந்தால், சேலம்-கரூர் ரயில்வே தடத்தில் அமைந்துள்ள நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து கோயிலை அடையலாம். வான்வழி: சேலம் விமான நிலையம் இக்கோயிலுக்கு அருகில் உள்ள விமான நிலையமாகும் (60 கி.மீ).

5 /5

அந்த கணித மேதைக்கு உதவிய நாமகிரித் தாயார் கண்டிப்பாக அனைத்து மாணவர்களுக்கும் தன் அருளை வழங்கத் தயாராக உள்ளார். நம்பிக்கையோடு அவரை வணங்கி கணக்கில் உங்கள் விடா முயற்சியைத் தொடர்ந்தால், கண்டிப்பாக 100/100 நிச்சயம்.