IPL Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம் எப்போது, எங்கு நடக்கிறது...? வெளியான தகவல்

IPL 2025 Mega Auction Venue: ஐபிஎல் 2025 மெகா ஏலம் எங்கு, எப்போது நடைபெற இருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  

  • Nov 04, 2024, 19:09 PM IST

இந்தியாவுக்கு வெளியே ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் நடைபெறும் அதே நேரத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 /8

இந்திய கிரிக்கெட் இப்போது பெரும் பரபரப்பில் இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்த கையோடு, இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட செல்கிறது.   

2 /8

நவ.22ஆம் தேதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை பார்டர் கவாஸ்கர் தொடரில் (Border Gavaskar Trophy) இந்தியா - ஆஸ்திரேலியா விளையாட உள்ளது. இந்த தொடரை இந்தியாவில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் ஒளிபரப்பாகும்.  

3 /8

இது ஒருபுறம் இருக்க, ஐபிஎல் மெகா ஏலமும் (IPL 2025 Mega Auction) இந்த நவம்பர் மாத இறுதியில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஐியோ சினிமாஸ் ஓடிடி தளத்திலும் ஒளிபரப்பாகும்.   

4 /8

அதுவும் ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் நவம்பர் 25 ஆகிய இரண்டு நாள்கள் சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.   

5 /8

பெர்த் டெஸ்ட் நவ.22ஆம் தேதி தொடங்கும் நிலையில், இந்த டெஸ்ட் போட்டியின் போதே ஐபிஎல் மெகா ஏலமும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இரண்டு நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் நடத்தால் ரசிகர்கள் மற்றும் வல்லுநர்களுக்கு சிரமத்தை கொடுக்கும்.   

6 /8

எனவே, இவை இரண்டையும் வெவ்வேறு நேரத்தில் ஒளிபரப்ப திட்டமிடுவார்கள். இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 7.05 மணிக்கு தொடங்கும் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் ஐபிஎல் மெகா ஏலம் இந்திய நேரப்படி மதியம் நடைபெறலாம்.   

7 /8

தற்போதைய மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளது.   

8 /8

அதே நேரத்தில் ஜாஸ் பட்லர், எய்டன் மார்க்ரம், கிளென் மேக்ஸ்வெல், ஃபாப் டூ பிளெசிஎஸ் உள்ளிட்ட முன்னணி வெளிநாட்டு வீரர்களும் ஏலத்திற்கு வர உள்ளார்கள்.