தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை 2500 ரூபாயாக அதிகரிக்குமா?

Kalaingar Magalir Urimai Thogai | தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் இப்போது நாடு முழுவதும் விரிவடைந்து கொண்டிருக்கிறது.

 

Kalaingar Magalir Urimai Thogai News | தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் பெண்களுக்கு கொடுக்கப்படும் தொகை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதா? என பார்க்கலாம்.

1 /7

திமுக அரசு பொறுப்பேற்றால் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. திமுகவின் தேர்தல் வாக்குறுதி இப்போது செயல்படுத்தப்படுகிறது.

2 /7

மாதந்தோறும் தமிழ்நாட்டு பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த திட்டம் அமலுக்கு வந்தபிறகு புது ரேஷன் கார்டுக்கு விண்ணபிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.

3 /7

வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் பெண்களுக்கு இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட்டிக்கின்றனர். தமிழ்நாட்டில் இப்போது சுமார் 1 கோடியே 20 லட்சம் பேர் மாதந்தோறும் மகளிர் உரிமை தொகை பெற்று வருகின்றனர்.

4 /7

புதிய பயனாளிகள் விரைவில் சேர்க்கப்படுவார்கள் என அரசு தெரிவித்திருக்கிறது. மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பங்கள் எல்லாம் பரிசீலனை செய்யப்பட்டு தகுந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. 

5 /7

இந்த சூழலில் தமிழ்நாட்டின் இந்த திட்டம் இப்போது இந்தியா எங்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கர்நாடகா தொடங்கி இப்போது ஜார்க்கண்டிலும் மாந்தோறும் 2500 ரூபாய் கொடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருக்கிறார்.

6 /7

அம்மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்களுக்கு மாந்தோறும் 2500 ரூபாய் கொடுக்கப்படும் என கூறியிருக்கிறார். அவரின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டையும் எட்டியிருக்கிறது. அங்கு அறிவித்ததை போல் தமிழ்நாட்டிலும் மகளிர் உரிமைத் தொகை அதிகமாக கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

7 /7

ஆனால், தமிழ்நாட்டின் நிதிநிலை இப்போதே மோசமாக இருக்கிறது. அதன் காரணமாகவே மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்ப்பு என்பது ஆமை வேகத்தில் நடக்கிறது. அதனால், மகளிர் உரிமைத் தொகை அதிகரிப்பு என்ற பேச்சுக்கே தமிழ்நாட்டில் இப்போதைக்கு வாய்ப்பு இல்லை.