இந்த பிரச்சனை இருக்கா? அப்போ பிரியாணி இலைக்கு இன்றே ’NO’ சொல்லுங்க

Bay Leaf Side Effects : சிலருக்கு பிரியாணி இலை சாப்பிடுவது நன்மை தராது. அதேபோல் சில அடிப்படை உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் இந்த மசாலா பொருட்களை சாப்பிடக்கூடாது.

 

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நல்ல உணவுப் பழக்கம் மிகவும் அவசியம். அதன்படி பிரியாணி இலை / பிரிஞ்சி இலை செரிமான பிரச்சனை, சளி, பருவநிலை மாறும் போது ஏற்படும் ஹார்மோன் சேஞ்சஸ் போன்றவற்றை குணபடுத்த உதவும். எனினும் தனித்துவமான ஆரோக்கிய நன்மைகளை கொண்ட இந்த இலை சில நோய்களுக்கு எதிரி. அவர்களுக்கு இந்த இலை பாதுகாப்பானது இல்லை.

 

1 /6

ஜீரணம்: பிரியாணி இலை குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவும் என்றாலும் வயிறு கோளாறு பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த இலைகளை சாப்பிடுவது வயிற்று வலியை மேலும் அதிகமாக்கலாம்.

2 /6

கர்ப்பிணி பெண்கள்: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கட்டாயம் பிரியாணி இலையை தங்களின் உணவில் சேர்த்துக்கொள்ள கூடாது, ஏனெனில் பிரியாணி இலை உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும், இது கர்ப்பிணிக்கும் குழந்தைக்கும் பல பிரச்சினைகளைத் தூண்டலாம்.

3 /6

ஆஸ்துமா: ஆஸ்துமா உட்பட பல பிரச்சனைகளுக்கு பிரியாணி இலை நன்மை என்றாலும், இது தொடர்பான அறிவியல் சான்றுகள் இல்லை என்பதால் இதை உறுதிபடுத்த முடியாது.  

4 /6

டான்சில்ஸ்: உங்களுக்கு டான்சில்ஸ் பிரச்னை இருந்தால், கட்டாயம் பிரியாணி இலையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இந்த இலை உங்களது தொண்டையில் எரிச்சலைத் தூண்டலாம். இதனால் டான்சில்ஸ் அதிகரிக்கலாம்.

5 /6

நீரிழிவு நோய்: பிரியாணி இலை பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இவை சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். எனினும் நீரிழவு நோய்க்காக மருந்து உண்பவர்கள் தங்கள் உணவில் பிரியாணி இலைகளை சேர்த்துக் கொள்ளக்கூடாது, இவை லோ சுகர் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

6 /6

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.