தீபாவளி பண்டிகை காலத்தில் தங்கம் வாங்குவது ஏன் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது

Can We Buy Gold On Diwali: தீபாவளி அன்று தங்கம் வாங்கலாமா? தீபாவளி அன்று தங்கம் வாங்கினால் நல்லதா? ஏன் தீபாவளி அன்று தங்கம் வந்க்வாங்கா வேண்டும்? என பல கேள்விகளுக்கான விடைகளை தெரிந்துக்கொள்ளுவோம்.

Auspicious To Buy Gold On Diwali: இந்தியாவில் பண்டிகைகள் கலாச்சார மரபுகளுடன் ஆழமாக பின்னிப்பிணைந்து உள்ளன. தீபாவளி பண்டிகை காலம் என்பது செழிப்பையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தருவதாக இந்தியாவில் நம்பப்படுவதால், மக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளிகளை வாங்குகிறார்கள். 

1 /9

இந்து கலாச்சாரத்தில், தங்கம் செல்வத்தின் அடையாளம் மட்டுமல்ல, தூய்மையின் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது. தீபாவளி நாளில் தங்கம் வாங்குவதால், லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

2 /9

தீபாவளி நாளில் தங்கம் வாங்குவது என்பது கலாச்சார பாரம்பரியம் மற்றும் முதலீடு ஆகியவற்றின் கலவையாகும். தீபாவளி நாளில் கடவுள் லட்சிமிக்கு பூஜை செய்வதால், தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் உள்ளது. 

3 /9

தந்தேராஸ் மற்றும் தீபாவளியின் போது தங்கம் வாங்குவது இந்து மதத்தில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஐந்து நாள் திருவிழாவாக கொண்டாப்படும் தீபாவளி பண்டிகை காலத்தில் தங்கம் வாங்குவதற்கான ஒரு நல்ல நேரமாக கருதப்படுகிறது. 

4 /9

தீபாவளி பண்டிகை காலத்தில் தங்கம் வாங்குவது குடும்பத்தில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது. அதன் காரணமாக மக்கள் தங்கத்தை வாங்குகிறார்கள்.

5 /9

தீபாவளி பண்டிகையை அடுத்து வரவிருக்கும் நாட்கள் நல்ல செழிப்பாக ஆசீர்வாதத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக தங்கம் வாங்குவதை ஒரு வழக்கமாக மக்கள் கொண்டுள்ளனர். மறுபுறம் தங்கம் ஒரு நிலையான பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.

6 /9

தீபாவளி பண்டிகை காலத்தில் தங்கத்தை நகைகளாக, நாணயங்களாக அல்லது தங்கத்தில் முதலீடு செய்வது என பல்வேறு வடிவங்களில் தங்கத்தை வாங்குவதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பமாக கருதப்படுகிறது. மேலும் டிஜிட்டல் தங்கத்தையும் வாங்கலாம்.

7 /9

கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற செயலிகள் மூலம் டிஜிட்டல் தங்கத்தை வாங்கலாம். இது தவிர, எம்எம்டிசி பிஏஎம்பி (MMTC-PAMP) இந்தியா பிரைவேட். லிமிடெட், டிஜிட்டல் கோல்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Digital Gold India Pvt Ltd Augmont Gold Ltd) போன்ற நிறுவனங்களில் டிஜிட்டல் தங்கத்தை வாங்கலாம்.

8 /9

இந்தியாவின் முக்கிய நகரங்களில் 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை - புதுடெல்லி: ரூ 7,390 - மும்பை: ரூ.7,375 - கொல்கத்தா: ரூ.7,375 - சென்னை: ரூ.7,375

9 /9

இங்கே கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் நம்பிக்கை மற்றும் முதலீடு தரவுகள் அடிபப்டையிலானது. இதற்கும் Zee News Tamil சேனலுக்கு சம்பந்தம் இல்லை. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையை சார்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவேடுங்கள்.