How To Get Blessings Of Sri Varahi Amman : சக்தியின் அனைத்து வடிவங்களையும் போற்றும் நவராத்திரியின் மூன்றாம் நாள் அன்னை வாராகிக்கு உரியது. வாராகி வழிபாட்டை எப்படி செய்வது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்....
Navaratri Day 3 : சைவம், வைணவம், சாக்தம் மற்றும் பிராமணியம் என நான்கு வழிபாட்டு முறைகளை பின்பற்றுபவர்களும் வழிபடும் தெய்வம் அன்னை வாராகி ஆவார். வாழ்க்கையில் எந்த கஷ்டம் வந்தாலும் கைகொடுக்க அன்னை இருக்கும்போது கவலை எதற்கு?
பிரம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கெளமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி என சப்த கன்னிகளில் ஒருவரான வாராகி அம்மன் பன்றியின் முகமும், பெண்ணின் உடலும் கொண்டவர்
சப்த கன்னியர்களில் ஒருவரான வாராஹி அம்மன், தெய்வ குணத்துடன் விலங்கின் ஆற்றல் கொண்டவர். ஒருபுறம் தாயை போன்ற இரக்கமும், தயாள குணம் உடையவளாக இருந்தாலும், மறுபுறம் தீமைகளை அழிக்கும், மூர்க்க குணம் உடையவர் வாராகி அம்மன் என்பதால் இவர் உக்ர தெய்வமாக வழிபடப்படுகிறார். மாந்திரீகத்தில் வாராகி அன்னை வழிபாடும் உண்டு
எதிரிகள், தீயசக்திகள் உட்பட துயரங்கள் அனைத்தையும் போக்கக்கூடிய தெய்வமாக வாராஹி விளங்குகிறார். வாராஹி வழிபாடு பரவலாக இருந்தாலும், காசி மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் மட்டுமே வாராஹி அன்னைக்கு என தனி சன்னதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னை பராசக்தியின் போர்ப்படையின் தளபதி வாராஹி அன்னை என்பதால், வாராஹியை வழிபடுபவர்களுக்குஎதிரிகளே இருக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது
ஜாதகத்தில் சனி ஆதிக்கம் உள்ளவர்கள், சனி திசை நடப்பவர்கள் வாராஹி அன்னையை வழிபட்டால் நிம்மதியாக வாழலாம்
ஏழரை சனி, கண்டச்சனி என சனியின் எந்த திசை நடந்தாலும், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வாராஹி அம்மனை வழிபட்டால், சனியால் ஏற்படும் துன்பங்களில் இருந்து நிவர்த்தி கிடைக்கும்.
வாராஹி அம்மனை வழிபட, பஞ்சமி, பெளர்ணமி, அமாவாசை நாட்கள் சிறப்பானவை.
கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி நட்சத்திரங்கள் பிறந்தவர்கள் வாராஹி அம்மனை வழிபட வேண்டும். மகரம், கும்பம் ராசிகளை சேர்ந்தவர்களும் வாராஹியை வழிபட்டால் கஷ்டங்கள் தீரும்
பொறுப்புத்துறப்பு: பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது