Primordial Soup: ஆதியும் விஞ்ஞானமும்! பிரபஞ்சத்தின் தோற்றம் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு!

பிரபஞ்சத்தின் தோற்றம் தொடர்பான ஆராய்ச்சிகளில் மர்மமான துகள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது முக்கியமான் திருப்புமுனையாக இருக்கலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 25, 2022, 03:13 PM IST
  • காஸ்மிக் கோட்பாடு
  • பிரபஞ்சத்தில் பரவியுள்ள ஈர்ப்பு அலைகலின் ஆய்வு
  • பிளாஸ்மாவில் பல குவார்க்குகள் மற்றும் குளுவான்கள் உள்ளன
Primordial Soup: ஆதியும் விஞ்ஞானமும்! பிரபஞ்சத்தின் தோற்றம் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு! title=

சுமார் 4.0 முதல் 3.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்த அனுமான நிலைமைகளின் தொகுப்பான primordial soup அல்லது ப்ரீபயாடிக் சூப் (prebiotic soup) பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய கோட்பாட்டின் அடிப்படை அம்சத்தை குறிக்கிறது.

பிரபஞ்சத்தின் தோற்றம் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள அறிவியல் வானியலாளர்கள், இதுதொடர்பான மர்மமான துகள்களை அடையாளம் கண்டுள்ளனர்.

சமீபத்திய ஆய்வின்படி, வானியலாளர்கள் மர்மமான X துகள்களை ''primordial soup'இல் அடையாளம் கண்டுள்ளனர்.

Physical Review Letters என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியில், ஆரம்பகால பிரபஞ்சத்தில் ஏராளமாக இருந்த துகள்களின் வகைகளை மறுவரையறை செய்வது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ | மனித மூளையில் Brain Chips பொருத்தினால் என்ன நடக்கும்?

பெருவெடிப்பு (Big Bang) மாதிரியின் படி, பிரபஞ்சம் மிகவும் சுருக்கப்பட்ட ஆதி நிலையில் இருந்து வேகமாக விரிவடைந்தது, இதன் விளைவாக அடர்த்தி மற்றும் வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டது.

விரைவில், எதிர்ப்பொருளின் மீது பொருளின் ஆதிக்கம், புரோட்டான் சிதைவை முன்னறிவிக்கும் செயல்முறைகளால் நிறுவப்பட்டிருக்கலாம். இந்த கட்டத்தில், பல வகையான அடிப்படைத் துகள்கள் இருந்திருக்கலாம். சில வினாடிகளுக்குப் பிறகு, பிரபஞ்சம் சில கருக்கள் உருவாக அனுமதிக்கும் அளவுக்கு குளிர்ந்தது.

ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் லித்தியம் ஆகியவை திட்டவட்டமான அளவுகள் உற்பத்தி செய்யப்பட்டதாக கோட்பாடு கணித்துள்ளது. சுமார் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபஞ்சம் அணுக்கள் உருவாக போதுமான குளிர்ச்சியாக இருந்தது.

"This is just the start of the story" என்று MITயின் இயற்பியல் துறையின் இணைப் பேராசிரியரான யென்-ஜியே லீ கூறுகிறார்.

ALSO READ | பாம்பைக் கண்டா படையும் நடுங்கும்! 125 பாம்பு ஒண்ணா கடிச்சா என்னவாகும்?

"பிரபஞ்சம் தொடர்பான ஆராய்ச்சியில், ஆதியில் பிரபஞ்சம் உருவானது தொடர்பான ஒரு சிக்னலைக் கண்டுபிடிக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளோம். அடுத்த சில ஆண்டுகளில், X துகள்களின் உள் கட்டமைப்பை ஆய்வு செய்ய குவார்க்-குளுவான் பிளாஸ்மாவைப் பயன்படுத்த விரும்புகிறோம், இது பிரபஞ்சம் எந்த வகையான பொருளை உருவாக்க வேண்டும் என்பது பற்றிய நமது பார்வையை மாற்றும்.

"சில காரணங்களால், இயற்கையானது இரண்டு அல்லது மூன்று குவார்க்குகளில் இருந்து மட்டுமே துகள்களை உற்பத்தி செய்யத் தேர்ந்தெடுத்தது என்று பல ஆண்டுகளாக நாங்கள் நினைத்தோம்" என்று லீ கூறுகிறார்.

"கோட்பாட்டளவில், பிளாஸ்மாவில் பல குவார்க்குகள் மற்றும் குளுவான்கள் உள்ளன, அவை எக்ஸ் துகள்களின் உற்பத்தி அதிகரிக்க வேண்டும்" என்று லீ கூறுகிறார். ஆனால் இந்த குவார்க் சூப்பில் பல துகள்கள் உற்பத்தியாவதால் அவற்றைத் தேடுவது மிகவும் கடினம் என்று இதுவரை கருதப்பட்டது. 

ALSO READ | கின்னஸ் சாதனை படைத்து 465 நாள் இருந்த குமிழி! விஞ்ஞானக் குமிழி

காஸ்மிக் கோட்பாடு ( theory of cosmic) தொடர்பான சோதனைகளில் முன்னேற்றம் இருந்தாலும், அது புவியீர்ப்பு அலைகளைக் கண்டறியத் தவறியதால், பல அண்டவியல் அறிஞர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

குவாண்டம் விளைவுகளால் இயக்கப்படும் காஸ்மிக் , பிரபஞ்சம் ஒரு துணை அணு துகள்களை விட சிறிய அளவிலிருந்து உருவாகிறது, ஆதிகால ஈர்ப்பு அலைகளும் குவாண்டம் செயல்முறைகளால் உருவாக்கப்பட்டதாகவே அண்டவியல் வல்லுநர்கள் (cosmologists) நம்புகின்றனர். 

அப்படியானால், இன்றைய பிரபஞ்சத்தில் பரவியுள்ள ஈர்ப்பு அலைகளை ஆய்வு செய்வதன் மூலம்,  ஐன்ஸ்டீனின் கனவை அடைவதை சாத்தியமாக்கலாம்.

"தற்போது எங்களிடம் போதுமான புள்ளிவிவரங்கள் இல்லை. அடுத்த சில ஆண்டுகளில், இந்த இரண்டையும் நாம் பிரிக்க முடியும், மேலும் பல தரவுகளும் கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்று லீ கூறுகிறார். 

இது ஆரம்பகால பிரபஞ்சத்தில் உற்பத்தியான துகள்களின் வகைகளைப் பற்றிய நமது பார்வையை விரிவுபடுத்தும்.

ALSO READ | கொரோனாவின் இறுதிச்சுற்று! மருத்துவ நிபுணரின் இனிப்பான செய்தி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News