மாப்பிள்ளைய கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லுங்க: கியூட் மணமகளின் வைரல் வீடியோ

Funny Wedding Video: எதிரில் இருக்கும் உணவுப் பொருட்களைப் பார்த்த மணப்பெண்ணால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. பசி உச்சம் தொடவே அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல், சாப்பிடத் தொடங்குகிறார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 12, 2022, 06:51 PM IST
  • இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
  • மணமகளின் வைரல் வீடியோ.
  • பசி தாங்காத மணமகள்.
மாப்பிள்ளைய கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லுங்க: கியூட் மணமகளின் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்திய திருமணங்கள் அழகானவை, வண்ணமயமானவை. பாரம்பரியம், இசை, நடனம் மற்றும் காதல் நிறைந்தவை. அழகியலுக்கு இந்திய திருமணமும் ஒரு அற்புதமான உதாரணம். இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட ஒரு மணப்பெண்ணின் திருமண வீடியோ வைரலாகி வருகிறது. 

திருமண நாளில் பல சடங்குகள் செய்யப்படுவதால், பல சமயம் மாப்பிள்ளை ஊர்வலம் மண்டபம் வந்தடையவே நேரம் ஆகிவிடும். அனைத்து சடங்குகளும் நிறைவடைந்தவுடன்தான் மணமகள் சாப்பிட வேண்டும் என்ற சம்பிரதாயமும் உள்ளது. ஆனால், சில சமயம் காத்திருக்கும் போது மணமகளுக்கு பசி ஏற்பட்டு தர்மசங்கடமான நிலையும் ஏற்படுகிறது. 

மணமகன் இல்லாமலேயே உண்ண ஆரம்பித்த மணமகன்

திருமண சடங்குகள் அனைத்தும் முடிந்ததும் மணமகனும் மணமகளும் இணைந்து உணவு உண்பது வழக்கம். இருப்பினும், சில மணப்பெண்களால் நீண்ட நேரம் காத்திருக்க முடிவதில்லை. ஆகையால், முன்கூட்டியே சிலர் சில சிற்றுண்டிகளை சாப்பிடுவதும் உண்டு.  சடங்குகளில் பசியால் பிரச்சனை வராமல் இருக்க இவ்வாறு செய்வதுண்டு. 

மேலும் படிக்க | ஃபோட்டோ முக்கியம் அண்ணே: மாஸ் காட்டும் மணப்பெண்ணின் வைரல் வீடியோ 

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. பசியோடு இருக்கும் ஒரு மணமகள் பசியை கட்டுப்படுத்த முடியாமல், தவிக்கும் தவிப்பையும், பின்னர் அவர் கியூட்டாக உண்ணும் விதத்தையும் இதில் காண முடிகின்றது. 

எதிரில் இருக்கும் உணவுப் பொருட்களைப் பார்த்த மணப்பெண்ணால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. பசி உச்சம் தொடவே அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல், சாப்பிடத் தொடங்குகிறார். 

வைரலாகி வரும் வீடியோவில், மணப்பெண் பசி தாங்காமல் மாப்பிள்ளை ஊர்வலம் வருவதற்குள் உணவு ஸ்டாலிலிருந்து உணவு வரவழைத்து உண்பதை காண முடிகின்றது. அழகான லெஹங்காவில் திருமண நகைகள் அணிந்து மணமகள் அழகாக உள்ளார். 

சாப்பாடுதான் முக்கியம் என்னும் கியூட் மணமகளின் வீடியோ இதோ:

பசி தாங்காத மணமகள் 

இந்த வீடியோ thestreetfoodcenter என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதனுடன், மணமகள், 'மன்னிக்கவும், நான் ஒரு சாப்பாட்டு ரசிகை.. என் வருங்கால கணவன் வீட்டிற்கும் இது பிடித்து இருக்கிறது’ என்று எழுதியுள்ளார். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

மேலும் படிக்க | Viral Video: அட இது நான் தானா... குரங்கு குட்டியின் க்யூட் ரியாக்‌ஷன் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News